மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

சூரரைப் போற்று: சூர்யா தரும் மியூசிக் ட்ரீட்!

சூரரைப் போற்று: சூர்யா தரும் மியூசிக் ட்ரீட்!

சூர்யா கதாநாயகனாக நடித்து, சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று திரைப்படத்தின் முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை கதாநாயகனாக்கி சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யா, மாரா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் இடம்பெறும் மாரா என்னும் ஹிப்ஹாப் ராப் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பாடலைப்பாடுபவர் குறித்த ‘ஆச்சரியமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்’என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்த நிலையில் அந்தப் பாடலை சூர்யா பாடியுள்ளார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே அஞ்சான் படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து 'ஏக் தோ தீன்' எனத் தொடங்கும் பாடலைப் பாடிய நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூரரைப் போற்று திரைப்படம் மூலமாக மீண்டும் பாடகராக மாறியுள்ளார்.

இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனமும், பாலிவுட் தயாரிப்பாளர் குனித் மோங்காவும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon