மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பெண்கள் ஏன் ஆண்கள் தினம் கொண்டாட வேண்டும்?

பெண்கள் ஏன் ஆண்கள் தினம் கொண்டாட வேண்டும்?வெற்றிநடை போடும் தமிழகம்

சர்வதேச ஆண்கள் தினம் இன்று. பெண்கள் தினம் பெரிய அளவில் விளம்பரத்தோட கொண்டாடப்படுற நமது இந்தியாவில் ஆண்கள் தினம் என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை. பெண்கள் தினத்துக்கு தன்னை சுற்றியுள்ள பெண்களுக்கு பரிசுப்பொருளோ, சாக்லெட்டோ, இல்லை எதும் இல்லைன்னா குறைந்தது Happy Womens Day ன்னு வாழ்த்துக்களையாவது பரிசளிக்கும் ஆண்களும் பெரிய அளவில் ஆண்கள் தினத்துக்கு தங்களுக்குள்ள வாழ்த்து சொல்லிக்கிற மாதிரி தெரியல. அவர்கள் கொண்டாடததைக்கூட தன்னடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டுவிடலாம்.

ஆனால் பெண்கள் ஏன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எதுக்குங்க இந்த ஆண்கள் தினம் கொண்டாடனும்? வெளிய போக முடியுதா நிம்மதியா? பஸ்ல போக முடியுதா எந்த பயமும் இல்லாம? லேட்டா வீட்டுக்கு வந்தா ரோடுல நடக்க எவ்வளவு பதட்டப்பட வேண்டியிருக்கு. தனியா ஒரு டீக்கடைக்கு போயி ஒரு டீ குடிக்க முடியுதா? அப்புறம் எதுக்கு நான் கொண்டாடனும் ஆண்கள் தினம்? இது பல பெண்களோட மனவோட்டம். ஒரு வகையில நியாயமானதும் கூட.

ஆனா அப்போதும் கொண்டாடனும் ஆண்கள் தினம். எல்லாரும் இல்லை. குறிப்பா சில ஆண்களை தன்னோட வாழ்க்கையில் வச்சு இருக்கவங்க கொண்டாடியே ஆகணும். அந்த பெண்கள் யார்? ஏன்?

தனியா வெளிய போய்ட்டு இரவு வர லேட்டா ஆய்டுச்சுன்னா, சமூகத்தின் மேல இருக்க பயத்தையும் மீறி, தன்னோட பொண்ணு மேல இருக்க நம்பிக்கையில் காத்து இருக்க அப்பா இருக்க பொண்ணுங்க கண்டிப்பா கொண்டாடனும்.

வீட்டுக்கு வர பஸ் கிடைக்கல டா? ரொம்ப டயர்டா இருக்கு. வந்து பிக்கப் பண்ணிகிறியான்னு கேட்கும்போது, தூக்கம் கலையாத கண்களோட, நைட் டிரஸ்ல வந்து நிக்குற தம்பி இருக்கா உங்களுக்கு அப்போ கண்டிப்பா கொண்டாடியே ஆகணும்.

எவ்வளவுதான் அடிச்சுக்கிட்டாலும், சண்டைபோட்டாலும் முதல் தடவை நீங்க சமையல் பண்ணிக்கொடுத்தப்போ எவ்ளோ கலாய்ச்சாலும் பிளேட்ள ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காம சாப்பிட்ட அண்ணா இருக்காங்களா? அவங்களுக்கு நீங்க இன்னுமா வாழ்த்து சொல்லல?

மானேஜர் கிட்ட பயங்கரமா திட்டு வாங்கிட்டு அழுகை வர்ற நிலையில இருக்கையில, come buddy, போய் ஒரு காபி சாப்டு வரலாம்ன்னு சொல்ற உங்கக்கூட வேலை செய்யும் கலீக்-க்கு காபிக்கூட சேர்த்து ஒரு கேக்கும் வாங்கி குடுத்துடுங்க.

யாரு என்ன சொன்னா என்ன? என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும்னு, யாரோ கோள் மூட்டினதக்கூட உங்க கிட்ட சொல்லாம உங்கள நம்புற கணவரா? இன்னுமா நீங்க கிப்ட் ஆர்டர் பண்ணல.

ரோட்ல தினமும் யாரோ கிண்டல் பண்றாங்க. வீட்ல சொன்னா பயந்துடுவாங்கன்னு சொல்லாம உங்க நண்பன்கிட்ட சொல்றீங்களா? உங்க நண்பர் அடுத்து என்ன பண்ணார்ன்னு விடுங்க. நம்ம சொல்ல முடியுற நண்பர்க்கு, ஆண்கள் தினம் முடியறதுக்குள்ள வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. இப்படி ஒரு நண்பர் கிடைச்சத்துக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்ளோ காரணங்கள் வச்சிட்டுமா கொண்டாடாம இருக்கீங்க. தினங்கள் கொண்டாடுறதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா உங்கள சிரிக்கவைக்கும் உங்க அப்பாவையோ, சகோதரரையோ, கணவரையோ காதலனையோ, நண்பரையோ சிரிக்க வைக்க ஒரு சின்ன வாய்ப்பு. மிஸ் பண்ணாம வாழ்த்திடுங்க.

இதனைப் பொறுமையாகப் படித்த அனைத்து ஆண்களுக்கும் எங்கள் ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon