மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

கொலை மிரட்டல்: பாதுகாப்பை நாடிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

கொலை மிரட்டல்: பாதுகாப்பை நாடிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

ஓரினச் சேர்க்கை/தன்பாலின ஈர்ப்பு குற்றமில்லை என இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ஐ உச்ச நீதி மன்றம் ரத்து செய்தாலும், மக்கள் இன்னும் பழமைவாத மனநிலையிலேயே இருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள பராசத் பகுதியைச் சேர்ந்த, தன்பாலின ஈர்ப்பாளர்கள் இயற்கைக்கு மாறாக இருப்பதாக குற்றம் சாட்டி சொந்தக் குடும்பத்தினரே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்கள் இந்தக் காதலர்கள்.

இவர்களில் ஒருவர் இதைப் பற்றிக் கூறும் போது, “நான் ஓரின சேர்க்கையாளர் என்று எனது குடும்பத்தினரிடம் கூறியபோது, அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. என் தந்தை எங்களை மிரட்டினார்.

அவர்கள் என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். நான் ஓரின சேர்க்கையாளர் என்று மனநல மருத்துவர் சொன்னபோது, அவர்கள் அவரை நம்பவில்லை,"என்று கூறினார்.

“நான் என்னுடைய காதலரை காப்பாற்ற விரும்புகிறேன். அவரைக் கொல்ல வேண்டும் என எனது குடும்பத்தினரே கூறுகின்றனர். நான் அவருக்கு எதுவும் ஆக விரும்பவில்லை” என மேலும் தெரிவித்தார்.

எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்த ரஞ்சிதா சின்ஹா இது குறித்து கூறும் போது, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் இது மிக மோசமாக இருக்கிறது என கவலை தெரிவித்தார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon