மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 நவ 2019

கிச்சன் கீர்த்தனா: கதம்ப இட்லி

கிச்சன் கீர்த்தனா: கதம்ப இட்லி

கார்த்திகை மாத விரத நாட்களில் இரவு வேளையில் சாதம் எடுத்துக்கொள்ளாமல் சிற்றுண்டிகள் உண்பது நம் வழக்கம். காலையில் உபவாசம் இருந்து மதியம் கடவுளுக்குப் படையலிட்டு அந்த உணவை உண்போம். இரவில் ரொம்பவும் எளிதாக ஜீரணிக்கும் சிற்றுண்டிகளை மட்டுமே நைவேத்தியமாகப் படைத்து உண்பது ஐதிகம் மட்டுமல்ல... உடல் நலத்துக்கும் உகந்தது என்பர். வழக்கமான இட்லி, தோசை என்றில்லாமல் இந்தக் கதம்ப இட்லியை எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம், நாவுக்குத் தனிச்சுவையை அளிக்கும்.

என்ன தேவை?

இட்லி அரிசி, கடலைப்பருப்பு, ரவை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா 100 கிராம்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

எலுமிச்சைப்பழம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10 (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

தேங்காய்த் துருவல் - அரை கப்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு இரண்டு மணி நேரம் புளிக்கவிடவும். இதில் ரவையைச் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வேண்டிய எல்லாவற்றையும் தாளித்து மாவில் சேர்க்கவும். இதில் எலுமிச்சைச்சாறு, சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய கிண்ணத்தில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். இதை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விநியோகிக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 19 நவ 2019