மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

இதையும் கொண்டாடலாமே: அப்டேட் குமாரு

இதையும் கொண்டாடலாமே: அப்டேட் குமாரு

அது எப்டிங்க, நாம ரொம்ப நாளா எதிர்பாத்து காத்திருக்க விஷயம் கனவில நம்ம கைல கெடச்சா கூட சரியா இந்த அலாரம் அடிச்சு அத கெடுத்து விட்டிடுது. இன்னைக்கு என்னடான்னா முதலமைச்சர் சீட்ல உக்காரப் போறேன். கரெக்டா அலாரம் அடிக்குது. அந்த சோகத்தில கண்ண முழிச்சு ஃபோன் ஓப்பன் பண்ணி பாத்தா ஸ்டேட்டஸ்ல, மெசேஜ்ல எல்லாம் ஒரே மென்ஸ் டே விஷஸ் தான். வீட்ல கூட இன்னைக்கு நல்ல கவனிப்பு இருக்கும்னு சந்தோஷமா வெளிய வந்தா, ‘டேய் அந்த டாய்லெட்ட நல்லா தேச்சு கழுவி விடு டா’ன்னு அம்மா கத்துறாங்க. கழுவுறது தப்பில்ல ஆனா ஆண்கள் தினம் கொண்டாட சந்தோஷமா கெளம்பி வந்தவன இப்பிடி சொல்றாய்ங்களேன்னு கேட்டா, ‘ஆண்கள் தினம் இருக்கட்டும் இன்னைக்கு, டாய்லெட் டே டா அத மொதல்ல கொண்டாடுவோம்’னு கைல ஒரு பக்கெட்ட குடுத்திட்டு போறாய்ங்க. சரி இனி என்ன பண்றதுன்னு கண்ணாடிய பாத்து எனக்கு நானே ஹேப்பி மென்ஸ் டே சொல்லிகிட்டு, சொன்ன வேலைய செய்ய கெளம்பிட்டேன். சுத்தம் சோறு போடும்பாய்ங்களே....சுத்தம் பண்ணிக்கிட்டு வந்தாதான் சாப்பாடு தருவாங்க போல...நீங்க அப்டேட்ட படிங்க. ஆங்.. அப்புறம் ஹேப்பி மென்ஸ் டேங்க.

அன்புத் தோழி

இது ஒரு வழக்கமான நாள் தான் ஆண்களுக்கு

ஆனால் நம்மை போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள்

இந்த நாளை சிறப்பித்து வாழ்த்தும் போதுதான்

இன்று ஆண்கள் தினமென்று அவர்களுக்கே தெரியும்.

அண்ணாமார்களுக்கும்

அன்பு சகோதரர்களுக்கும்

இனிய ஆண்கள் தின வாழ்த்துக்கள்

இதயவன்

பாஜக தனியாக

நின்றாலும்

ஊராட்சி தேர்தலில்

வெற்றி பெறும்

கூட்டணி தர்மத்துக்காக

அதிமுக வுடன் சேரவேண்டியது இருக்கு- இல. கணேசன்

பாஜகவில் மட்டும்

காமெடி செய்பவர்களுக்கு வெற்றிடமே உருவாகாது

கருப்பு மன்னன்

மாநிலங்களவை காவலர்கள் சீருடை மாற்றம் : "மறுபரிசீலனை செய்யப்படும்" - வெங்கையா நாயுடு

காவி ட்ரெஸ் கொடுக்க போறாங்க போல ...

கனகாம்பரி

Makeup போட்டா ...மேக்கப் கலையிற வரைக்கும்தான் Confident இருக்கும்..

ஆனா Makeup போடாம இருந்தா Life long ஆ Confident இருக்கும்..

கோழியின் கிறுக்கல்

நம்ம குழந்தைக்கு அறிவுரை கூறும் பொழுது, நம்ம அம்மாவும், அப்பாவும் 'நீயா பேசுற!?' என்கிற ரீதியில் நம்மை ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க!

அப்படியே கண்ணுக்குள்ள ஊசி ஏத்துற மாதிரி இருக்கும்!!

ஜோக்கர்

"அம்மாவுக்காக" துக்கங்களை மறைத்து,

"மனைவிக்காக" சந்தோஷத்தை விட்டுக்கொடுத்து,

"மகளுக்காக" மொத்தமும் உழைத்து,

"பேத்திக்காக" கடைசிகாலத்திலும் ஊழியனாய் ஓடும்,

புன்னகையில் கண்ணீரை மறைக்கும் "தாயுமானவன்"தான் ஒவ்வொரு ஆணும்.

மணி (தன்)

டூவீலர்க்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறவன பணக்காரனாவும்...

காருக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறவன ஏழையாவும்

பார்க்கும் இந்த சமூகம்...

ரமேஷ்.ஏ

குழந்தைய வீட்ல வச்சி சமாளிக்க முடியாத ஒருத்தன் தான் இந்த LKG,UKG-லாம் கண்டுபிடிச்சி இருப்பான்...!!!

நட்சத்திரா

"என்னமா"வில்

தாய்மையையும்

"என்னடா" வில் நட்பையும்

"என்னடி" யில் காதலையும்

சொல்பவன் அவன்

ச ப் பா ணி

பெயின்ட் மட்டும் கண்டுபிடிக்காமல் போயிருந்தால், பல பாத்ரூம்களுக்கு பக்கெட்டே இல்லாமல் இருந்திருக்கும்

*உலக கழிப்பறை தினம்

இதயவன்

வெயில் காலங்களில் ஹெல்மெட்யை கண்டுபிடித்தவரை சாவுக்கு மேல ஒரு தண்டனை தரனும் என வெறி வரும்

அதுவே மழை,குளிர் காலத்தில் ஒபிஎஸ் கொடுத்தது போல விருதுகளும் பட்டங்களும் கொடுத்துட்டே இருக்கனும்னு தோன்றும்.

தூவானம்

பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தொப்பிக்குள்ளிருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த மாயவித்தைக் காரரிடம்...

"அம்மாவை வரவழைக்க முடியுமா?" என்றான் அனாதைச் சிறுவன்..!

கிப்சன்

பிராமணர்களுக்கு கூலி வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - ராமதாஸ்

இது தவறான தகவல் - பாமகவினர்

அப்ப நீங்க இன்னும் முட்டாள்களா தான் இருக்கீங்களா

செந்திலின்_கிறுக்கல்கள்

வருங்காலங்களில் வீட்டு சமையல் என்பதும் உலக அதிசய பட்டியலில் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

-லாக் ஆஃப்

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon