மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

கிரவுண்டில் சண்டை: பங்களாதேஷ் பிளேயருக்கு 5 ஆண்டு தடை!

கிரவுண்டில் சண்டை: பங்களாதேஷ் பிளேயருக்கு 5 ஆண்டு தடை!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷஹதத் ஹுசைன் என்ற ஃபாஸ்ட் பவுலருக்கு 5 ஆண்டு தடை விதித்திருக்கிறது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்.

பங்களாதேஷின் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் போது, பந்தின் ஒரு பக்கத்தை நன்றாக தேய்த்துத் தருமாறும், அணியின் சக பிளேயரான அராஃபத் சன்னி என்றவரிடம் கேட்டிருக்கிறார் ஷஹதத். ‘நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்’ என அராஃபத் கூறியதால், மைதானத்தில் வைத்தே அவரை அடித்திருக்கிறார் ஷஹதத். இந்த செயலால் அதிர்ச்சியடைந்த நடுவர்கள், உடனடியாக அவரை மைதானத்திலிருந்து வெளியேற்றி, ‘நான்காம் நிலை குற்றம்’ என அவருக்கு ஐந்தாண்டு தடை வழங்கக் கோரியும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஷஹதத் மற்றும் அராஃபத் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், ஷஹதத் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 5 ஆண்டு தடை விதித்தும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டன.

பங்களாதேஷுன் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின் முதல் பிரிவில் குல்னா, டாக்கா, ரங்பூர் மற்றும் ரஜ்ஷஹி ஆகிய நான்கு டிவிஷன்கள் மோதிக்கொண்டன. இவற்றில், ஷஹதத் இடம்பெற்ற டாக்கா டிவிஷன் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர் தான். அந்தப் போட்டியின் இடையே இப்படியொரு செயலை செய்ததால், மொத்த அணியின் உற்சாகமும் வீணாகிப்போனது.

ஷஹதத் இப்படி தண்டனைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. 2015ஆம் ஆண்டில் சிறுமி ஒருவரை வீட்டில் வேலைக்கு அமர்த்தி, அவரை அடித்து துன்புறுத்தியதால் தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடம் வரை கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை பெற்றார். அதன்பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்து, தண்டனையை அனுபவித்த பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தார். 31 வயதாகும் ஷஹத்துக்கு, மீண்டும் சர்வதேச அணியில் இடம்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தனது ஆத்திரத்தால் அந்த எண்ணம் கனவாகவே போய்விட்டது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon