மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 நவ 2019

இந்தியாவின் நீளமான ஏரியில் செத்து மடியும் பறவைகள்!

இந்தியாவின் நீளமான ஏரியில் செத்து மடியும் பறவைகள்!

காலநிலை மாற்றத்தாலும், சுற்றுச் சூழல் மாசுபாட்டாலும் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் 17,000 வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது சாம்பர் உப்பு ஏரி. 35.5 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி ஆகும். குளிர்காலங்களில் அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் இடம்பெயர்ந்து இங்கு வருவது வழக்கம். இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரிக்கு வருகை தந்த வெளிநாட்டு பறவைகள் பல உயிரிழந்து வருகின்றன.

இதுவரை சாம்பர் உப்பு ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 17000 பறவைகள் உயிரிழந்துள்ளன. ஜெய்ப்பூர், நாகூர் மற்றும் அஜ்மர் ஆகிய பகுதிகளிலும் பறவைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஜெய்ப்பூரில் மட்டும் 8500 பறவைகள் உயிரிழந்திருக்கின்றன.

வனத் துறையின் தலைமைக் காவலர், அரிந்தம் தோமர், பறவைகள் உயிரிழப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர் ஆட்சியர் ஜாக்ரூப் சிங் உயிரிழந்த பறவைகளின் உடல்கள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு ஷோலர், ரூடி ஷெல்டக், ப்ளோவர்ஸ், அவோசெட்ஸ் எனப்படும் அரியவகை பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து விழுவது குறித்து ஆய்வுக்கு உட்பட்டதில் முதற்கட்டமாக, botulism எனப்படும் கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் காரணமாகப் பறவைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது நரம்புகளைப் பாதிக்கும் ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான நோய் என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

செவ்வாய் 19 நவ 2019