மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: தினம் ஒரு முட்டை - நல்லதா? கெட்டதா?

கிச்சன் கீர்த்தனா: தினம் ஒரு முட்டை - நல்லதா? கெட்டதா?

உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது முட்டை.

முட்டையில் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், கால்சியம் என நிறைய சத்துகள் இருக்கின்றன. எனவே முட்டை ஓர் ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது என்கின்றன சில ஆய்வுகள்.

சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் 186 மி.கிராம் கொழுப்பைக் கொண்டுள்ளது. இது தவிர, வேறுவகையிலும் கொழுப்பு உடம்பில் சேரும்போது தேவைக்கு அதிகமாகிவிடும்.

எனவே, வயது அதிகரிக்க அதிகரிக்க, மஞ்சள் கரு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. வாரத்துக்கு நான்கு முட்டைகள் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. குறிப்பாக, 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் தினமும் ஒன்று என்றளவில்கூட எடுத்துக்கொள்ளலாம். முதியவர்கள் வாரத்துக்கு மூன்று முட்டை சாப்பிடலாம்; மஞ்சள் கருவைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது.

நேற்றைய ரெசிப்பி: கொள்ளு ரசம்

சனி, 16 நவ 2019

chevronLeft iconமுந்தையது