sதமிழகமே நீதி கொடுப்பாயா?: பெற்றோரின் கதறல்!

public

“ ஐஏஎஸ் எக்ஸாம்ல இந்த பொண்ணுக்கு கண்டிப்பா ஃபர்ஸ்ட் மார்க் கிடைக்கும். அந்த அளவுக்கு புத்திசாலி பொண்ணுன்னு பத்திரிகைகளும் ஊடகங்களும் புகழ்ந்து பெருமை படுத்தின ஒரு மாணவி. ரொம்ப குறுகிய காலத்தில் தன்னோட வாழ்க்கைய அழிச்சிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க. இந்த மாதிரி நிலைமை இனி யாருக்குமே வரக்கூடாது. இது எல்லா செய்திகளையும் போல ஒண்ணு ரெண்டு நாட்களில பேசி மறந்து போக வேண்டிய ஒரு விஷயம் கிடையாது. இத ஒரு தேசிய பிரச்சனையா எடுத்துகிட்டு, உன்னதமான கல்விய தருகிற கல்வி நிலையங்களில இந்த மாதிரி ஒரு பிரச்னை இனி வராம நாம பாத்துக்கணும்” இந்த வார்த்தைகளை அப்துல் லத்தீப் என்கிற அப்பா ஊடகங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கும் போது அவரோட செல்ல மகள், அந்த அப்பாவை விட்டும் இந்த உலகத்தை விட்டும் ரொம்ப தூரம் போய்ட்டா..

ஃபாத்திமா லத்தீப்…இன்னைக்கு ஊடகங்களில் நிறைந்து நிற்கிற ஒரு பெயர். சென்னை ஐஐடியில ஃபரஸ்ட் இயர் எம்.ஏ ஹுமானிட்டீஸ் படித்து வந்த இவங்க கடந்த நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாங்க. என்ன காரணம்னு தெரியாம ஆளாளுக்கு அவங்க யூகத்தில ஒரு கதைய சொல்லி அந்த மரணத்தையும் கொலை செய்துகிட்டு இருந்த நிலையில தான் மிகப் பெரிய ஆதாரமா அவங்க ஃபோன் கிடைச்சுது. என்னோட தற்கொலைக்கு இவர் தான் காரணம்னு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனோட பெயரை டைப் செய்து அத தன்னோட மொபைல் வால்பேப்பரா செட் செஞ்சு வச்சதோட மட்டுமில்லாம, இன்னும் இத பத்தின விரிவான விஷயங்கள் சாம்சங் நோட்ஸ்ல இருக்குன்னும் குறிப்பிட்டிருக்காங்க.

ஆனா சுதர்சன் பத்மநாபன் மட்டுமே இந்த மரணத்துக்கு காரணம் இல்லை. பேராசிரியர்கள் மிலிந்த் ப்ராமே, ஹேமச்சந்திர காரா போன்றவர்களோட பெயர்களையும் அவங்க குறிப்பிட்டிருக்காங்க. இதில் இன்னும் பல பேராசியர்களும் மாணவர்களும் சம்மந்தப் பட்டிருக்காங்கன்னு சகோதரி ஃபாத்திமாவோட அப்பா சொல்றாங்க. “கடந்த 29 நாட்களாக நடந்த விஷயங்கள் குறித்த முழு டீட்டெயில்ஸும் எங்க கிட்ட இருக்கு. இத எடுத்து கிட்டு முதலமைச்சர், கல்விதுறை அமைச்சர், காவல்துறைன்னு எல்லா முக்கிய துறைகளுக்கும் நாங்க புகார் கொடுத்திருக்கோம். இத்தனை சாட்சியங்களையும் தாண்டி தமிழகம் எங்களுக்கு நீதி தரலன்னா, சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போகவும் தயார்”ன்னு அவரு சொல்றாரு.

ஃபாத்திமா ஐஐடி கல்லூரியில சேர்ந்து சரியா ஒரு மாதம் ஆனதும் அங்க ஒரு வினாடி வினா போட்டி நடந்திருக்கு. இந்தியாவிலயே மிக அதிக எண்ணிகையிலான மாணவர்கள் கலந்து கொள்கிற ரொம்ப பெரிய ஒரு போட்டி அது. அந்த போட்டியில் ஃபாத்திமா கலந்துகிட்டு மூன்றாவது இடத்தில வெற்றி பெற்றாங்க. அதுக்கு அப்புறமா நடந்த எல்லா அறிவு சார்ந்த போட்டிகளிலும் முதல் பரிச ஃபாத்திமா வாங்கினாங்க. ஆனா அத்தனை வெற்றிகள் கிடைத்தும் ஃபாத்திமா சந்தோஷமக இல்லை. அதுக்கு என்ன காரணம்னு அவங்க இதுக்கு முன்னாடி சொல்லவும் இல்லை. ஒரு வேளை பாத்திமா என்கிற ஒரு பெயர் அந்த பொண்ணுக்கு பல பிரச்னைகளைக் கொடுத்திருக்கலாம். கல்வி கண்ண திறக்கும்னு சொல்லுவாங்க. ஆனா அப்படி தொறக்கப்பட்ட கண்களைக் கூட சாதி வெறியும், தன் மதத்தின் மீதான அளவு கடந்த பற்றும் மறச்சிரும் போல. அந்த அப்பா சொல்ற மாதிரி ஐஐடில கேஸ்ட் டிஸ்கிரிமினேஷன்னு ஒண்ணு இல்லவே இல்லைன்னு சொல்லிட்டு கண்டிப்பா கடந்து போயிட முடியாது. அதுக்கு ஐ` ஐடி மரணங்களோட வரலாறே சாட்சியா இருக்கு.

ஃபாத்திமா புத்திசாலித்தனமான மாணவி, கிளாஸ்ல முதலிடம் வருபவர் என்று அவரது பேராசிரியர்கள் சொல்றாங்க. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் துறைத் தலைவர் உமாகாந்த் தாஸ் சொல்லும் போது மாணவி ஏன், எப்படி உயிரிழந்தாங்க என்பதற்கு இன்னும் துப்பு துலங்கவில்லைன்னு சொல்லி இருக்காங்க. ஃபாத்திமா குறிப்பிட்டிருக்கிற இந்த பேராசிரியர் சுதர்ஷன் சில நாட்களுக்கு முன்னாடி இண்டெர்னல் எக்ஸாம் மார்க்ஸ்ஸ கொடுத்திருக்காங்க. 20 மார்க்குக்கு நடந்த எக்ஸாம்ல சரியா எழுதி இருந்தும் 18 மார்க் தர வேண்டிய இடத்தில 13 மார்க் மட்டும் தான் அவங்களுக்கு கொடுத்திருக்காங்க. இத எதிர்த்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டிருக்காங்க.

மத ரீதியான கொடுமைகள் ஃபாத்திமா அனுபவிக்க நேரிடும்னு முஸ்லீம் அடையாள முக்காடு கூட போடாம தான் ஐஐடில அவங்க இருந்திருக்காங்க. வட இந்தியாவில இருக்கிற புகழ் பெற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்தும் தமிழ் மண் தன்னோட மகளை பத்திரமா பாத்து, பாதுகாப்பு தரும்னு நம்பி சென்னைக்கு அவளை அனுப்பி வச்ச அந்த அம்மாவோட நம்பிக்கை, தமிழ் மண் மீதான நம்பிக்கை இங்கே உடைக்கப்பட்டிருக்கு. “என்னோட குழந்தை பேண்ட்டோட கயிறு கட்டினா கூட வலிக்கும்னு சொல்லுவா…. அவ கழுத்தில அந்த கயிறு இறுகும் போது எப்படி துடிச்சிருப்பா, யாரு இப்படி செய்ய அவள தூண்டி இருப்பாங்க”ன்னு அந்த அம்மா கேட்கும் போது சொல்றதுக்கு நம்ம கிட்ட பதில் இல்ல.

வெறும் 5 மார்க்குக்காக ஃபாத்திமா மாதிரியான கேரளாவே கொண்டாடின ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்வாரா? இப்போ இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கு. ஃபாத்திமாவோட குடும்பம் போலவே நீதி கிடைக்கும்னு நம்பிக்கையோட நாமும் காத்திருப்போம்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *