மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

படிச்சவனுக்கு மதம் பிடிக்கலாமா பாஸ்? :அப்டேட் குமாரு

படிச்சவனுக்கு மதம் பிடிக்கலாமா பாஸ்? :அப்டேட் குமாரு

“நாட்ல எவனுக்கு எந்த பிரச்சினைன்னாலும் முதல் குரல் குடுக்குறது நம்ம தான் சார். நம்ம இடத்துலயே ஒரு புள்ளைக்கு இப்டி நடந்திருக்குன்னா, இவனுங்களை சும்மா விடக்கூடாது சார்” அப்படின்னு, சென்னை ஐஐடி வாசல்ல போராட்டம் பண்ணவங்கள்ல ஒருத்தர் பேசிட்ருந்தார். வாங்க சார் உள்ள போய் என்னன்னு கேப்போம்னு சொன்னார். இல்லை சார், இது இவங்க பிரைவேட் பிராப்பர்ட்டி. நாம உள்ள போனா போலீஸ் புடிச்சிட்டு போயிடும் அப்டின்னதும், ‘சார் அரெஸ்ட் பண்ண வேண்டியவன் உள்ள இருக்கான் சார். நம்மள ஏன் அரெஸ்ட் பண்ணுவாங்க?’ன்னு கேட்டார். அதோ பாருங்க போர்டுல ‘இந்த இடம் ஐஐடி சென்னைக்கு சொந்தமானது’ அப்படின்னு போர்டு போட்ருக்காங்கன்னதும், ‘சார் இந்த இடம் ஐஐடி சென்னைக்கு சொந்தமானதா இருக்கலாம். ஆனால், இந்த காலேஜ் எல்லாருக்கும் சொந்தமானது தான. யார் வேணும்னாலும் படிக்கலாம்ல அப்டின்றார். நேத்தும் இப்டி தான் ஒருத்தர் பேசுனாரு. நல்லா படிச்சு உள்ள இருக்க வேண்டியவன் படிக்கமுடியாத சூழல்ல வெளிய இருக்கான். அவன் விட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டவன் வெளிய இருக்கான். கவர்மெண்ட் என்னடான்னா, படிச்சு பாஸ் பண்ணா தான் லேப்டாப் தருவேன்னு சொல்லுது. இங்க என்னடான்னா பத்தாவது ஃபெயிலான ஒரு பையன் ரிமோட் கண்ட்ரோல் விமானம் கண்டுபுடிக்கிறான். குழந்தைகள் தினம் கொண்டாடுனா போதாது. குழந்தைகளை குழந்தைகளா இருக்கவிடணும். நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் வீட்டுக்குப் போறேன்.

கருப்புநிலா

இந்தா நான் குழந்தையா இருந்த போது எடுத்த போட்டோ

எனக்கும் குழந்தைகள் தின வாழ்த்து சொல்லு

கோழியின் கிறுக்கல்!!

மதிய வேளையில் மெய் மறந்து வரும் தூக்கத்திற்கு ஈடு இணையாக எதைக் கொடுத்தாலும் ஈடாகாது!!!

காக்கைச் சித்தர்

ஆனா மத்த அதிமுக அமைச்சர்களுக்கு கொடுக்குற குறைந்தப்பட்ச மரியாதைய கூட திமுக எம்பி/ எம்எல்ஏக்கள் மாஃபாவுக்கு குடுக்கமாட்டேங்குறாங்க

mohanram.ko

கொசு கடிக்கும்போது, சிறிது கைக்கும் வேலை கொடுக்கப்படும்

Ashok Kumar Thavamani

இந்தியாவிலேயே தன் மகளுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்ற ஒரு தந்தையின் நம்பிக்கையை எங்கே காப்பாற்றத் தவறினோம் என்று தமிழர்கள் சுயபரிசோதனை செய்து வேண்டிய நேரமிது. தமிழ்நாட்டில் பாஜக வேரூன்ற தொடங்கிய பிறகு நமது பெருமைகளை இழக்க தொடங்கியிருக்கிறோம்

கோழியின் கிறுக்கல்!!

உங்கள் தவறுகளுக்கு விசாரணை கூட கிடையாது!

எங்களின் தவறுக்கு விசாரணையின்றி தண்டனை!!

T R

என்னுடைய சாதி தான் அவர்களுக்கு பிரச்சனை -ரோஹித்

என்னுடைய பெயரே அவர்களுக்கு பிரச்சனை -பாத்திமா

JJ சுஜித்

நீலிக்கண்ணீர் வடிப்பது ஸ்டாலினுக்கு வாடிக்கை; சேப்பாக்கம் கிரிக்கெட் குத்தகை குறித்து விசாரணை வேண்டும்: ராமதாஸ்

அதிமுக ஊழல் என்று புத்தகம் வெளியிட்டிர்களே இப்போது அந்த புத்தகத்தை எங்கே வைத்துள்ளீர்கள்? அதை எடுத்து படியுங்கள் அப்போது தெரியும் நீலிக்கண்ணீர் யார் வடிக்கிறார் என்று

சோட்டா பீம்

நிலமா இருந்தா புடுங்கியிருவானுங்க..

நல்லா படிச்சு இருந்தா உயிரயே வாங்கியிருவானுங்க..

நட்சத்திரா

லவ் மேரேஜுக்கும் அரேஞ்ச்டு மேரேஜுக்கும் உள்ள வித்தியாசம் என்பது...

"டேய்" என்பதற்கும் "யோவ்" என்பதற்கும் உள்ள வித்தியாசமே

மகாராஜா

நாங்கள் வாக்கப்பட்டது அதிமுகவுக்கு. ஆனால், எங்களை வச்சிருப்பது பிஜேபி. இது தெரியாமல் தமிழ் நாட்டை நம்பிவிட்டீர்கள்.

-லாக் ஆஃப்.

வியாழன், 14 நவ 2019