மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சீனாவில் மனித முகம் கொண்ட மீன்?

சீனாவில் மனித முகம் கொண்ட மீன்?

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று உலவுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. 14 நொடிகள் உடைய அந்த வீடியோவில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று நீந்தி வந்து வாய் திறந்து மூடுவது போல இருக்கும். மேலும், அதில் சீன மொழியில் ஒரு பெண் பேசுவது கேட்கும்.

ஆனால், உண்மை என்னவென்றால் மனித முகம் கொண்ட மீன் இல்லவே இல்லை. சிலர் பிரபலம் அடைவதற்காக தொழில்நுட்ப வசதியை கொண்டு அப்படி ஒரு வீடியோவை தயாரித்து உலவ விட்டு இருக்கிறார்கள். பகிரப்படும் வீடியோவை உற்று நோக்கினால் அந்த மீனின் மேல் புறத்தில் ஒட்டு வேலை செய்திருப்பது கண்டுபிடிக்க முடியும். இது போன்ற மாற்றங்களை செய்ய நிறைய நவீன செயலிகள் உண்டு. இது போன்ற காணொலி Deep Fake வகையைச் சார்ந்தது.ஆகையால் தொழில்நுட்ப உதவியுடன் தயார் செய்து பொய்யாகப் பரப்பப்படும் காணொலிகளை கண்டு உண்மையென நம்பிப் பகிராதீர்கள்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon