மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ராதாபுரம் எம்.எல்.ஏ யார்? நீடிக்கும் தடை!

ராதாபுரம் எம்.எல்.ஏ யார்? நீடிக்கும் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இவ்வழக்கு அக்டோபர் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நவம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று (நவம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 22ஆம் தேதி வரை தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கையும் அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தனர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon