மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

வீட்டைக் காப்பாற்றி: மன்னிப்புக் கடிதம் எழுதிய வீரர்!

வீட்டைக் காப்பாற்றி: மன்னிப்புக் கடிதம் எழுதிய வீரர்!

ரொம்ப கொடுமையான சம்பவங்கள் நடக்குற இடத்துலகூட சின்ன நிகழ்வுகள் நடந்து மனச லேசாக்கும். அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்துல ஆஸ்திரேலியாவுல நடந்திருக்கு.

ஆஸ்திரேலியாவின் பல இடங்கள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுவரை காட்டுத் தீக்கு மூன்று பேர் பலியாகி இருக்காங்க. 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிஞ்சு சாம்பலாகியிருக்கு. இந்த நேரத்துல பால் செஃப்கி என்ற இளைஞர் வேலைய முடிச்சிட்டு நியூ சவுத் வேல்ஸ்ல இருக்க தன்னோட வீட்டுக்குத் திரும்பியிருக்காரு..

அங்க காட்டுத் தீயில் தன்னோட வீடும் பாதிக்கப்பட்டிருப்பதை பாத்தவருக்கு அதிர்ச்சி. என்ன ஆச்சோன்னு பதறிப்போய் வீட்டுக்குள்ள போய் பாத்தா ஆச்சர்யம். பெரியளவுல பாதிப்பு ஏற்படாம அவருடைய வீடு காப்பாத்தப்பட்டிருக்கு. காப்பாத்துனது யாருன்னு தெரியாம சமையலறைக்குள்ள போனவர் கண்ல ஒரு பேப்பர் தென்பட்டது. அந்த பேப்பரை எடுத்து படிக்கும்போது தான், தன்னுடைய வீடு, தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டது தெரிஞ்சிருக்கு. அந்தக் குறிப்பை எடுத்து படிச்சு பாத்தப்ப, வீட்டைக் காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருவரால் விட்டு செல்லப்பட்டது என தெரிஞ்சு மேற்கொண்டு படிச்சிருக்காரு.

அந்த குறிப்பில், “உங்கள் வீட்டைக் காப்பாற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால் நுழைவு வாயில் கூரையை மட்டும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. பின்குறிப்பு: வேலை முடிந்தபிறகு உங்கள் வீட்டில் இருந்த பாலை குடித்ததால், உங்களிடம் கடன்பட்டிருக்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் மனம் நெகிழ்ந்த பால் செஃப்கி, அந்தக் குறிப்பை சமூக வலைதளங்கள்ல பகிர்ந்தது மட்டுமல்ல. திருமணத்துக்குப் பிறகு கிடைச்ச சிறந்த மகிழ்ச்சின்னு சொல்லியிருக்காரு. இந்த வலைதளப் பதிவு பல ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு, கடைசியா அந்த குறிப்ப எழுதுன தீயணைப்பு வீரர் கண்ணுலேயே பட்டிருக்கு. ஹார்டி போர்ட்டர் என்ற தீயணைப்பு வீரர், அந்த குறிப்பு உங்க கைல கிடைத்ததுல மகிழ்ச்சின்னு சொல்லிட்டு, தீயணைப்பு பணியில ஈடுபட்டிருக்கும்போது, பால் செஃப்கி வீட்டில் தஞ்சம் அடைஞ்சதாகவும், அப்போ அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து குடிச்சதாகவும் சொல்லியிருக்காரு. கையெழுத்து மோசமா இருந்ததுக்கு, வெளிச்சம் சரியா இல்லைன்னு காரணம் சொல்லி மன்னிப்பும் கேட்டு இருக்காரு ஹார்டி போர்ட்டர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon