மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: கர்நாடகா ரசம்

கிச்சன் கீர்த்தனா: கர்நாடகா ரசம்

தயாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் ரசம், அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். ரசத்தில் பல வகைகள் உண்டு. அவற்றில் இந்த கர்நாடகா ரசத்துக்குத் தனியிடம் உண்டு.

என்ன தேவை?

துவரம்பருப்பு - முக்கால் கப்

புளித்தண்ணீர் - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4

பச்சை மிளகாய் - 2

தேங்காய்த் துருவல் - ஒன்றரை டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

சர்க்கரை - சிறிதளவு

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பைச் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குழைவாக வேகவைக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், புளித்தண்ணீர், வெங்காயம், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, பருப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பிறகு, அடுப்பை அணைத்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பருப்பு ரசம்

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon