மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ஆசிரியையைத் தாக்கிய மாணவர்கள்: வீடியோ!

ஆசிரியையைத் தாக்கிய மாணவர்கள்: வீடியோ!

உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் பள்ளி ஆசிரியை ஒருவரை மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் என்ற பள்ளி உள்ளது. இங்கு மம்தா துபே என்பவர் குழந்தைகள் நல ஆசிரியராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் வகுப்பில் பாடம் எடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவர் மட்டும் அங்கிருந்த நாற்காலியை எடுத்து ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தாக்கியது குறித்து அந்த ஆசிரியர், பள்ளி மேலாளர் என்னை முன்பு ஒரு முறை பணி நீக்கம் செய்தபோது முன்னாள் மாவட்ட மாஜிஸ்திரேட்டு நேகா ஷர்மா உதவியுடன் மீண்டும் பணிக்கு வந்தேன். மேலாளருக்கும் தனக்கும் இடையே தகராறு உள்ளது. நேகா ஷர்மா பணியிடை மாற்றம் செய்யப்பட்ட பிறகு பள்ளி மேலாளர் என்னைத் துன்புறுத்த முயல்கிறார். என் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு மாணவர்களை ஏவிவிட்டுள்ளார்.

காந்தி சேவா நிகேதனில் உள்ள வாஷ்ரூமில் வைத்து குழந்தைகளால் ஏற்கனவே பூட்டப்பட்டேன். இது குறித்து நான் அதிகாரிகளிடம் கேட்ட போது, குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்கள். இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு சென்றபோது, மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பள்ளி வட்டாரங்கள், ஆசிரியை மம்தா துபே மாணவர்களை ‘அனாதைகள்’ எனத் திட்டியுள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களைத் திட்டிக் கொண்டேதான் இருப்பார்” என்று தெரிவித்துள்ளன.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon