மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

படிப்பை புடுங்குறதுக்கு பதிலா.... :அப்டேட் குமாரு!

படிப்பை புடுங்குறதுக்கு பதிலா.... :அப்டேட் குமாரு!

டீக்கடை உக்காந்திருந்த தெரிஞ்ச மெக்கானிக் ஒருத்தர், ‘அண்ணா யுனிவெர்சிடி ரோட்டுப் பக்கம் போகாதப்பா. ஒரே டிராஃபிக்கா இருக்கு. படிக்க சொன்னா, எதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்காணுக. அப்பறம் இஞ்சினியரிங் படிச்சு வேலை கிடைக்கலைன்னு யூடியூப்ல கிண்டல் பண்றானுங்க’ன்னார். நமக்கு தான் வாய் சும்மா இருக்காதே. என்ன பிரச்சினைன்னு விளக்கி சொன்னதும் தான், அண்ணா யுனிவெர்சிட்டியும்-ஐஐடி மெட்ராஸும் வேற வேறன்னு அவருக்கு தெரிஞ்சுது. அந்தப்பக்கம் காலேஜ் உள்ள போறவனுங்க எல்லாருமே இங்கிலீஸ்ல தான்பா பேசுவாங்க. அப்பறம் அவன் எந்த சாமியை கும்புடுறவனா இருந்தா இவனுங்களுக்கு என்ன? நம்ம ஜெகன் பண்ணது தான்பா சரி’ அப்டின்னார். அவர் என்னண்ணே பண்ணாருன்னு கேட்டா ‘படிக்கிற எல்லா புள்ளைக்கும் இங்கிலீஸ் கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும்னு சொல்ட்டாரு தெரியாதா? இங்கிலீஸ் படிச்சா தெலுங்கு மறந்துரும்னு சொன்னானுங்க போல. உன் புள்ளையெல்லாம் இங்கிலீஸ் படிக்கலையான்னு கலாய்ச்சிட்டாருப்பா. கல்யாணம் ஆய்ட்டா அம்மா மறந்துருமா என்ன?” அப்டின்னு அவர் சொன்னதுக்கு டீக்கடைல இருந்த எல்லாருமே சூப்பர் சொன்னதும் அவருக்கு ஒரே வெக்கமா போச்சு. அவரை அப்டியே விடாம, அண்ணே ஸ்கூல்ல படிக்கிற எல்லா கிளாஸ் குழந்தைகளுக்கும் காலைல, ஈவ்னிங் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கப்போறாங்களாமேன்னு கேட்டது தான். ‘இப்டிதான்பா என்னையும் படிக்க விடாம பண்ணாங்க. ஒரு நாள் ஸ்பெஷல் கிளாஸ் கட் அடிச்சா 2 நாள் வெளிய நிக்க வைப்பாங்க. மூணாவது நாள் அசிங்கப்பட்டு லீவ் போட்டா, வீட்ல இருந்து ஆளை கூட்டான்னு சொல்வாங்க. வீட்டுக்கு சொல்ல முடியாம வெளிய சுத்துனா எவனாவது கூட்னுபோய் கெட்ட பழக்கம் சொல்லிக்குடுப்பான். இப்டி தான் என் வாழ்க்கை போச்சு. இப்ப பாத்தா இந்த ஜெனரேசனையும் அப்டியே பண்றானுங்க. பேசாம ஆந்திராவுக்கே போய்டலாம் போல’ அப்டின்னுட்டு கிளம்பிட்டார். இவருக்கே இவ்ளோ கோவம் வருதே, நம்ம ஆளுங்கட்சி என்ன பண்ணுதுன்னு பாக்கலாம்னு ஆஃபீஸ் வந்து ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணா, ஆவின் பால் பாக்கெட்ல திருக்குறள் போடப்போறோம்னு ராஜேந்திர பாலாஜி அறிவிப்பை வெளியிட்டிருக்காரு. அட இன்னுமா நீங்க திருவள்ளுவரையும், குறளையும் விடல. முதல்ல ஆவின் ஊழல் மேட்டரை கவனிச்சு என்னன்னு பாருங்கன்னு ஒருத்தர் கமெண்ட் பண்ணியிருந்தார். நாம இல்லைன்னா, நம்ம வேலையை செய்றதுக்கு ஒருத்தன் எங்கயாவந்து இருக்கான்ற நம்பிக்கைல வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க அப்டேட்டைப் படிங்க.

ஆர்வக்கோளாறு™ 🇮🇳

மாற்றுத்திறனாளியின் காலை பிடித்து வாழ்த்து சொன்ன கேரளா முதல்வர் பினராயி விஜயன் - செய்தி

இதென்ன பிரமாதம் நாங்கல்லாம் காலை பிடித்து தான் முதல்வரே ஆனோம் - ஒபிஎஸ் & ஈபிஎஸ்

பழைய சோறு

அப்பாவின் தோளில் அமர முடியவில்லை

வீட்டுக்குள் குனிந்து செல்ல வேண்டியுள்ளது

முன்பை போல் டயர் ஓட்ட இயலவில்லை

இதயம் எப்போதும் கனமாகவே இருக்கிறது

நான் ஏன் வளர்ந்தேன்...?

𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦

சென்னை IIT யில் மாணவர்களை தற்கொலையில் தள்ளும் பார்ப்பன பேராசிரியர்கள் மீது உடனடியாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது வேண்டும்.

Ramkumar

பொருளாதாரம் மிகபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது,வேலை வாய்ப்பு இழப்பு,ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டு எடுக்கவும்,மலக் குழியை சுத்தம் செய்யவும் போதிய உபகாரணங்கள் இல்லை இவ்ளோ பிரச்சனைய

திருவள்ளுவருக்கு காவி பூசுறது,அயோத்தி ராமர்கோவில் கட்டுறது இந்த 2ல வெச்சு மறச்சுடானுவ

கோழியின் கிறுக்கல்!!

கேள்வி கேட்கிறவனுக்கு பதில் கூறுவதை விட்டு விட்டு களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைக்கு போராடுங்கள்!

அதற்கு அவர்கள் பதில் தேடி அலையட்டும்!!

சிந்தியா

கற்றுக் கொள்வதற்கு

ஆசானை விடவும் மனம்தான்

முக்கியமாகத் தேவைப்படுகிறது

. மனதைக் குழந்தையைப்

போல வைத்துக்கொள்வது

எளிதானதா என்ன?

-எஸ்.ராமகிருஷ்ணன்.

ஜோக்கர்...

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நிகழ்வில் நாளை தீர்ப்பு ~ செய்தி

எதுக்கு அதை உருட்டிக்கிட்டு??!

Hasan Kalifa

சிலருக்கு வியாபாரம்தான் எல்லாமே,

சிலருக்கோ எல்லாவற்றிலும் வியாபாரம்.

செந்திலின்_கிறுக்கல்கள்

அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறிய நடிகர் ரஜினி, இத்தனை நாள் எங்கிருந்தார்? - முதல்வர் பழனிசாமி

தர்பார் சூட்டிங்க்ல இருந்தேன் - ரஜினி!

கோழியின் கிறுக்கல்!!

கரிசனத்தோடு கஷ்டம் தீர கடன் கொடுப்பவரை, 'கடன்காரன்' என்று கரித்துக் கொட்டும் ஊர் சார் இது!!!

இசை

தரவுகளை முன்வைப்பது காவிகளும் அடிமைகளும் புரிந்து தெளிந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. வாய்ப்பில்ல ராஜா!

இந்த 1% ஓட்டு கோஷ்டியை தாண்டி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தவே தரவுகளை பொதுவெளியில் முன்வைத்து விவாதிக்கிறோம்!

கடந்து செல்வது காவிகளை! கவனித்து பதிலளிப்பது மக்களுக்காக!

Muhaideenkani S

செய்யாத தப்புக்கு மண்ணைவாரி இறைக்கின்றன மாநகர பேருந்துகள்.

அபிவீரன்

மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்: செய்தி

காவி உடையணிந்த திருவள்ளுவரு ?

-லாக் ஆஃப்.

புதன், 13 நவ 2019