மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

பேனர்-கொடி: விஷால் வேண்டுகோள்!

பேனர்-கொடி: விஷால் வேண்டுகோள்!

ஆக்‌ஷன் திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு, நடிகர் விஷால் தரப்பில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் விஷாலின் ஆக்‌ஷன் திரைப்படத்துக்கான வேலைகள் தயாரிப்பு தரப்பில் தொடங்கிவிட்ட நிலையில், அவரது ரசிகர்களும் இந்தக் கொண்டாட்டத்துக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆக்‌ஷன் திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு, படத்தின் பேனர்கள் மற்றும் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் கொடிகள் ஆகியவற்றை வைக்கவேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

விஷாலின் மக்கள் நில இயக்கம் சார்பில், அதன் செயலாளர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘புரட்சித் தளபதி விஷால் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், எந்தவொரு பேனர்கள் மற்றும் கொடிகளை வைக்கவேண்டாம்’ கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், ‘இவற்றுக்காக செலவிடும் பணத்தில் ஏழை, எளியோர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான படங்களில் நடித்திருந்த சூர்யா, விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இதே கோரிக்கையை நடிகர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon