மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

எடப்பாடியின் சிரிப்பில் அம்மாவைக் காணலாம் :அப்டேட் குமாரு!

எடப்பாடியின் சிரிப்பில் அம்மாவைக் காணலாம் :அப்டேட் குமாரு!

என்ன பாஸ் ஒரே ஹேப்பியா போறீங்கன்னு ரோட்ல போன தெரிஞ்சவர் ஒருத்தர்ட்ட கேட்டதுக்க் “நம்ம முதல்வரோட சிரிப்பு நல்லாருக்குன்னு நானே பலமுறை சொல்லிருக்கேன். ஆனா, இன்னைக்கு ஒரு சிரிப்பு சிரிச்சாரே செம கடுப்பாகிடுச்சு” அப்டின்னார். என்ன மேட்டர் தல, விவரமா சொல்லுங்கன்னு கேட்டதுக்கு “அதிமுக கொடி கம்பத்தால ஆகிசிடண்ட் ஆகி, ஒரு பொண்ணு ஹாஸ்பிடல்ல கெடக்கே முதல்வரே! உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காம இப்படி பண்றாங்களே’ அப்டின்னு ஒருத்தர் கேட்டாரு. அதுக்கு அவர் வழக்கம்போல ‘இது என் கவனத்துக்கு வல்லை. இதுபத்தி கேட்டிருக்கிறேன். என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்னு சொல்லாம. கொடிக்கம்பம் வைக்கக்கூடாதுன்னு இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் வல்லையேன்னு சொல்றாருப்பா. எப்படி பண்ணாலும் கொலை கொலை தான. கத்தியை நேராக குத்தினால் தான் கொலை. குறுக்கால குத்தினால், குத்தப்பட்டவர் சாகக்கூடாது. செத்தால் அவர் மேலே கேஸ் போடவேண்டும்’ அப்டின்னு சொல்வாங்களோன்னு தோணுது. அம்மா ஆட்சி, அம்மா ஆட்சின்னு சொன்னாங்களேன்னு பாத்தா, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்னு சொன்ன ஆட்சி மாதிரில்ல இருக்கு” அப்டின்னு ரொம்ப டென்சனா பேசுனாப்ல. சரி, அவரை சமாதானப்படுத்தலாம்னு ‘அட கவலைப்படாதீங்கண்ணே. எதிர்க்கட்சி இதை கண்டிப்பா சும்மா விடமாட்டாங்கன்னு சொன்னா, இன்னும் டென்சனானவர் “அட அதைப் பாக்கத்தான்பா திமுக ஐடி விங் போய் பாத்தேன். அவங்க, எவனோ ஒரு வேலை வெட்டியில்லாதவன் ஸ்டாலின் மிசால உள்ள போனதுக்கு ஆதாரம் கேட்டான்னு அதைத் தேடி எடுத்து டிரெண்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்டிலாம் பண்ணா அப்பறம் எப்டி அடுத்த தரம் ஓட்டுப் போடுறது” அப்டின்னு கேட்டுட்டு போறாரு. இவங்களாவது பரவாலண்ணே ஒரிஜினல் டாகுமெண்டை தான் காட்றாங்க. ஆனா, சிலர் போலி டாகுமெண்டை ரெடி பண்ணி சுத்த விட்டுட்டு செண்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்லயே இருக்காங்கன்னு சொன்னதுக்கு அப்பறம் தான், ‘அட ஆமாப்பா’ அப்டின்னுட்டு சிரிச்சிக்கிட்டே போறாரு. அந்த சிரிப்பில் நான் எடப்பாடியைக் கண்டேன்னு அவர்ட்ட சொல்ட்டு வர்றேன். அப்டேட்டைப் படிங்க.

Pachai Perumal.A.

அரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

இரண்டு நாளா ஒரே டென்சன்ல இருக்காரே.. நேற்று ரஜினி இன்று கமல். என்னாச்சு..?

இவ்வளவு கோபமா பேசற ஆளும் கிடையாதே.

Murali Appas

உங்கள் அரசியல் அவருக்கு தெரியாதுதான் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களே

ஆனால் அவர் அரசியல் உங்களால் செய்ய முடியாது. ஏனென்றால், அது நேர்மை அரசியல்.

Mr.A.PARIMALAM

அரசு வங்கிகளோ நாசத்தின் விளிம்பில்

பொருளாதாராமோ சீர்கெட்டு போச்சு

தொழில் துறை கேடுகெட்டு கிடக்கு

வேலையில்லா திண்டாட்டமோ உச்சத்தில்

ரூபாயின் மதிப்போ படு பாதாளத்தில்

அடிப்படை கட்டமைப்பு பணிகளும் நிறுத்தம்

வறுமையில் வாடுவோரோ பெருக்கம்

மத்திய மாநில அரசே இதற்கு பதில் சொல்

செந்திலின்_கிறுக்கல்கள்

செல்போன் ஆண்டனா வைக்க நிலத்தை வாடகைக்கு கொடுத்த முதியவரிடம் செல்போன் இல்லை!

அலப்பரை

இப்ப என்ன ? ஸ்டாலின் மிசால உள்ள போகலைனு தெரிஞ்சுட்டா...?

இந்தியப் பொருளாதாரம் நட்டுகிட்டு நின்டுருமாமா?

போயி நாட்டப் பாருங்கடானா... ஆட்சியிலே இல்லாத ஆளுக்கிட்ட விழுந்து பொறன்டுட்டிருக்காய்ங்க

மித்ரன்

செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்கணும் போல இருக்கு; அமைச்சர் பாஸ்கரன் ஆவேசம்! - செய்தி

பாஸ்கரன்ங்குற பேர்ல ஒரு அமைச்சர் இருப்பதையே செல்போனை பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டோம் போவியா..?!

சுபாஷினிBAS

அமெரிக்காவில் இன்றுடன் மூன்று விருதுகளை பெற்றார் ஓபிஎஸ் - செய்தி

பத்து வேசம் போட்ட கமலஹாசனுக்கு கூட அமெரிக்கல ஒரு விருது கொடுக்கல...!

காவி வேசம் ஓன்று மட்டும் போட்ட ஓபிஎஸ்க்கு மொத்தம் மூனு விருதாடா

ரஹீம் கஸ்ஸாலி

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை -ஆளுநர் கோஷ்யாரி அறிவிப்பு

ஆண்டால் பிஜேபி ஆளணும். இல்லாட்டி ஜனாதிபதி ஆளணும். அம்புட்டுத்தான்.

திரு

இந்த மஹாராஷ்டிரா கூத்துல காமெடி என்னென்னா சிவசேனாக்கு மத்தில இருந்த ஒரு அமைச்சர் பதவி போச்சு... உள்ளதும்

போச்சு நொள்ள கண்ணா மொமண்ட்...

தமிழ்ச்செல்வி

நம்பிக்கை துரோகம் என்பது

நீ நம்பாத ஒருவரிடம் இருந்து உனக்கு கிடைக்காதது..

நீ யாரை அதிகமாக நம்பினாயோ அவரிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் நமக்கு.. !!!

கோழியின் கிறுக்கல்!!

உணவின் சுவை அறிந்து உண்பதற்கும், பயன் அறிந்து உண்பதற்குமான இடைவெளி தான் தலைமுறை இடைவெளி!!

புதியவன்

என்ன ஆதாரம் கொடுத்தாலும் இது செல்லாது வேற காட்டும்பான்.அவன் ஸ்டாலின் மிசா கைதியா இருந்தாரா இல்லையானு தெரிஞ்சுக்க இதைலாம் கேக்கல, இந்தப்பக்கம் சுத்தவிட்டுகிட்டே பின்னாடி அவனுக பண்ற பல சில்ற வேலைகள மறைக்க யூஸ் பண்றானுக

Niranjan kumar

மஹாராஷ்டிரா முதல்வர் பதவிக்காக எதிர்கட்சிகளான காங்கிரஸ்& தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி வைப்பது வெட்ககேடானது: பாஜக

ஹரியானாவில் பிரதமர் மோடியை மிகத்தரக்குறைவாக விமர்சித்த துஸ்யந்த் சவுதாலாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அங்கு ஆட்சி செய்துவருவது பாஜக!

Mr.A.PARIMALAM

திரு ஸ்டாலின் மிசா கைதி என்பதை தெருப் பொறுக்கிகளுக்கு நிரூபிக்கும் அவசியமே இல்லை

பல தெரு நாய்கள் பலவிதமா குரைக்குது என்பதற்காக நாமும் திருப்பி விதவிதமாக குரைக்க முடியுமா?

இன்று மிசா கைதி இல்லை என்பவன் நாளை இதைவிட மோசமான கட்டுக்கதையை கிளப்புவான் காறி துப்பிட்டு வேலையை பாருங்க

м υ я υ g α η . м

கற்பனையில் மிதந்து கனவுகளில் வாழ்ந்திட,, இப்போதைக்கு இரவுகள் போதுமானதாய் தான் இருக்கிறது.!

கோழியின் கிறுக்கல்!!

உணவகத்திற்கு சென்றால் என்ன இருக்கிறது என்று கேட்டு விட்டு 'ரெண்டு இட்லி கொடுங்க'ன்னு சொல்லியே பழகிவிட்டது நடுத்தர வர்க்கம்!!

Ratzazan

கன்னித் தீவு கதையும்!

90's கிட்ஸ் கல்யாணமும்!

ஒன்னு.

முடிய பல வருடங்கள் ஆகும்

M.R.K

லைபாய்(Lifebuoy)சோப் எப்போ

சீக்கிரம் கரைய ஆரம்பிச்சதோ

அப்பவே இந்திய பொருளாதாரமும்

கரைய ஆரம்பிச்சிருச்சு..!!

மெத்த வீட்டான்

முழு உடல் பரிசோதனை என்பது பர்சுக்கும் சேர்த்துதான் !

சிலந்தி

சில நேரங்களில் பேச்சு வரவேண்டிய இடத்தில்..

மூச்சுதான் வருகிறது..!!

கோழியின் கிறுக்கல்!!

வெளிக் காட்ட முடியாத கோபம்,

ஒரு புன்னகையாகவோ, ஒரு பெருமூச்சாகவோ கரைந்து விடும்!!

அழகிய கவிதை

குறை உள்ள மனிதனுக்கு

உடலை விட

மனதில் வலி அதிகம்

அது சமூகத்தால் ஏற்படும் வலி...‌.

ஜோக்கர்

OPS'க்கு மூன்று விருது ~ செய்தி

டேய், அது அமெரிக்கா இல்ல, நம்மூரு விஜய் அவார்ட்ஸ்..

ச ப் பா ணி

எழுவது தான் பிரச்சனை..,

வாழ்க்கையிலும் சரி, வாக்கிங் போவதிலும் சரி...!!

-லாக் ஆஃப்

செவ்வாய், 12 நவ 2019