மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

சென்னை பல்கலை: அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

சென்னை பல்கலை: அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

சென்னை பல்கலைக் கழகத்தில் 1980ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அரியர் இருந்தால் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வி திட்டத்தில், 1980 - 81ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை படித்தவர்களில் சில பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' இருந்தால், அந்த தேர்வை எழுத அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் 2020 மே மாதம் தேர்வில் பங்கேற்கலாம் என திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம். டிசம்பர் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னை பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பெற்று நவம்பர் 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு இணையதளம் வாயிலாகவோ அல்லது பல்கலைக் கழகத்திற்கு நேரில் வந்தோ தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் படிப்புகளை முடிக்காமல் இருக்கும் முன்னாள் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon