மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

லதா மங்கேஷ்கர் நலம்!

லதா மங்கேஷ்கர் நலம்!

பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

இரவு 1.30 மணிக்கு லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதைக் கேட்டு பலரும் வருந்தினார்கள். சோஷியல் மீடியாக்கள் உடனே உயிர்பெற்று தங்களது மன ஓட்டங்களை வெளிப்படுத்தின. லதா, மிக மோசமான நிலையிலிருப்பதாக ஒரு தகவலும், உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்ற தகவலும் அவரது ரசிகர்களை அலைக்கழித்ததால், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.

“லதா ஜி இப்போது நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதென்றால், மோசமான நிலைக்குச் சென்ற அவர் மிகவும் கடினமாகப் போராடியே நல்ல நிலைக்கு வரமுடிந்தது. ஒரு பாடகியாக இருந்ததால், அவரது நுரையீரல் வலிமையாக இருந்து அவரைக் காப்பாற்றியது” என்று அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

நிமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கருக்கு, இதயத்தின் இடது கீழறையும் செயலிழந்திருக்கிறது. எனவே, ஐசியூ அறையில் வைத்து லைஃப் சப்போர்ட் கருவிகளையும் பொருத்தி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர்கள் கூறினர் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம்.

உடல் நிலை மோசமாவதை அறிந்த லதா மங்கேஷ்கர், காலம் கடந்துவிடக் கூடாது எனக் கருதி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு விரைந்ததால், அவரது பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவம் பார்க்கமுடிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீரான பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்ததும் ரசிகர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon