மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

எஞ்சினீயரிங் கேள்வித் தாள்: குழப்பத்தில் மாணவர்கள்!

எஞ்சினீயரிங் கேள்வித் தாள்: குழப்பத்தில் மாணவர்கள்!

எஞ்சினீயரிங் தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத் தாளில் ஏற்பட்ட குளறுபடியால் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் எஞ்சினீயரிங் கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் எஞ்சினீயரிங் மாணவர்களுக்கு நேற்று சுற்றுச் சூழல் அறிவியல் மற்றும் எஞ்சினீயரிங் பாடத்திற்கான தேர்வு நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது. தேர்வுக்கான வினாத்தாளில் பிரிண்டிங் மிஸ்டேக் இருந்துள்ளது.

கேள்வித் தாளின் ‘பி’ பகுதியில் ஒரு கேள்விக்கு 13 மதிப்பெண்கள் அளிக்கப்படும். அதாவது, முதல் சாய்ஸில் கேட்கப்பட்டுள்ள இரண்டு துணைக் கேள்விகளுக்கு தலா 6.5 மதிப்பெண்கள் பகிர்ந்து வழங்கப்படும். ஆனால், மதிப்பெண் பகுதியில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக புல உறுப்பினர்களிடம் கேட்டபோது, “அந்த பகுதியின் துணைக் கேள்விகளுக்கு தலா 6.5 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக 8 மதிப்பெண் எனக் குறிப்பிடப்பட்டுவிட்டது. இதனால் பல மாணவர்கள் குழப்பமடைந்தனர். வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கப்படும்” என்று குறிப்பிட்டனர்.

ஆனால், சிறிய தவறைக் கூட பெரிய தவறாக காட்ட முயல்கிறார்கள் என்று பல்கலைக் கழக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon