மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 21 ஜன 2020

நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி: பாராட்டிய முதல்வர்!

நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி: பாராட்டிய முதல்வர்!

கேரள முதல்வரை சந்தித்த மாற்றுத் திறனாளி ஒருவர் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அப்போது அவர் தனது கால்களால் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். மாற்று திறனாளியான இவர் சிறந்த ஓவியராக உள்ளார். கைகள் இல்லாமல் கால்களை மட்டுமே பயன்படுத்தும் பிரணவ் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். கால்கள் மூலம் படங்கள் வரைந்து சமூகத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார் . சிறந்த படங்கள் வரைந்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நிவாரண நிதியும் வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தால் பாதிப்படைந்திருந்த போது தனது கால்களால் கையெழுத்திட்ட காசோலையை அம்மாநில அமைச்சர் ஏ.கே.பாலனிடம் வழங்கினார்.

தற்போது கேரளா மகா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த பிரணவ், பேரிடர் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பையும் செலுத்தியுள்ளார். அப்போது பிரணவ் கால்களை தன்னுடைய விரல்களால் பிடித்து குலுக்கி பாராட்டியுள்ளார் கேரள முதல்வர். இதனையடுத்து பிரணவ் தனது கால்களால் செல்போனை பிடித்து முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பினராயி விஜயன், பிரணவ் உடனான சந்திப்பு நெகிழ்ச்சி மிக்க தருணமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon