மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

அயோத்தியில் ராமர் கோயில்: காங்கிரஸ் வரவேற்பு!

அயோத்தியில் ராமர் கோயில்: காங்கிரஸ் வரவேற்பு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் 1,045 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு வழங்கியும், அதில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. சன்னி வஃக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று (நவம்பர் 9) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “அயோத்தி வழக்கின் தீர்ப்பு வந்திருக்கிறது. அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் கோயில் கட்டும் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த தீர்ப்பானது கோயில் கட்ட வழிவகுத்ததோடு, பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது” என்று கருத்து தெரிவித்தார்.

சனி, 9 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon