மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

கமலை துரத்தும் பாபி சிம்ஹா

கமலை துரத்தும் பாபி சிம்ஹா

கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன், அவர் திரையுலகில் 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட கொண்டாட்டமும் சேர்ந்து தமிழகத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. திரை ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு பதிலளிக்கும் விதத்தில் பல்வேறு நன்றிக்கடன்களையும் கமல் செலுத்திக்கொண்டே வருகிறார். கமலுக்கு போட்டியாக அவருக்கு நெருங்கியவர்களும் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ ஒன்றினை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டிருந்தார்.

சேனாதிபதி கேரக்டரில் உடையணிந்திருக்கும் கமல், ஒரு கோட்டையின் வாயிலில் நின்று உலகத்தைப் பார்ப்பதுபோன்ற அந்த ஃபோட்டோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்திக்காமல், ஷங்கர் ஃபோட்டோ மட்டும் பகிர்ந்திருப்பதன் காரணம் குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல் ஆச்சரியமான ஒன்று.

இதற்கு முன்பு பாபி சிம்ஹாவின் பிறந்தநாளன்று இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஷங்கர், பீட்டர் ஹெயின் ஆகியோருடன் பாபி சிம்ஹா கேக் வெட்டும் படங்கள் வெளியாகியிருந்தன. காரணம், கமல் இல்லாமல் மற்ற நடிகர்கள் பங்குபெறும் காட்சிகளை, கமலின் அடுத்த கால்ஷீட் வருவதற்குள் படமாக்கி முடிக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறார் ஷங்கர். எனவே, எந்த காரணத்துக்காகவும் ஷூட்டிங் தடைபடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டுவருகின்றனர்.

கமல் இல்லாமல் பாபி சிம்ஹாவை வைத்து படமாக்கப்படும் காட்சிகள் அனைத்தும், கமலை துரத்தும் காட்சிகள் தான் என்கின்றனர். சேனாதிபதியைத் துரத்திப் பிடிக்கும் போலீஸ் கேரக்டரில் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon