மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

கட்சியே காணோம் இதுல தலைவனாம், ஆள விடுங்க சாமி! :அப்டேட் குமாரு

கட்சியே காணோம் இதுல தலைவனாம், ஆள விடுங்க சாமி! :அப்டேட் குமாரு

உலகத்துல எத்தனையோ விசயம் இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுட்டு ‘பா.ஜ.க’ சாயம் பூசுர மேட்டரைப்பத்தி 11.30 மணிக்கு ஒரு கருத்தை சொல்லிட்டு, திரும்ப 12.30 மணிக்கு வந்து உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா சார்னு ரஜினி கேட்டது தான், 2019ஆம் வருட ‘அடேங்கப்பா அலெக்சாண்டரு ஜோக்’. இதை கேட்டே ஆகணும்னு கட்சில முக்கிய இடத்துல இருக்க அண்ணன் ஒருத்தருக்கு ஃபோன் போட்டு என்னண்ணே இப்படி பண்ணிட்டாருன்னு கேட்டா, ‘அட அவரை விடுப்பா தம்பி. அவராவது கட்சிக்கு வெளிய இருக்காரு. கட்சி ஆளுங்களையே நாலு பேரை செலெக்ட் பண்ணி, பொறுப்பு தலைவர்கள்னு யாரோ வதந்தியை கிளப்பிவிட்டிருக்காங்க. ஆனா, அந்த நாலு பேரும் அது நாங்க இல்லை, நாங்க இல்லை. இது வெறும் வதந்தி’ அப்படின்னு மறுத்துக்கிட்டு கிடக்காங்க. ஒரு கட்சியோட பேரைக் கேட்டாலே பயந்து நடுநடுங்கிப் போறாங்கன்னா அது நம்ம கட்சி தான் தம்பி’ அப்டின்னார். சரிண்ணே, சரிண்ணே நான் அப்பறம் பேசுறேன்னு வெச்சிட்டு வந்துட்டேன். ரொம்ப நேரம் பேசுனா, கருத்தா பேசுறியே கட்சில சேந்துடுறியான்னு கேப்பார் போல. நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் எல்லாரும் மறந்துபோன அந்த கமலுக்கு ஹாப்பி பர்த்டே பாடிட்டு வர்றேன்.

ஜோக்கர்...

அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் ~ ரஜினிகாந்த்

ஆமா, வண்டியை எப்போ விடுவ?

~ வாடகை குடுக்கும்போது

வாடகை எப்போயா குடுப்ப??

~ வண்டியை விடும்போது குடுப்பேன்.

கப்பல் வியாபாரி

லெமன் ஜூஸ் கேட்டா அதென்ன லெமன வெட்டி ஜூஸர்ல போட்டு அடிச்சி குடுக்குறது.. நீயே குடி இந்த கசாயத்த..

டீ

எக்செல் சுடிதார் இலகுவாய் பொருந்தும் உடல்வாகு

ஏழாம் நம்பர் செருப்பு

ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் சிடுசிடுக்கா முக லட்சணம்

முக்கியமாய் மாநிறம்.

வேறென்ன வேண்டுமெனக்கு.

எமகாதகன்

தேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

அவரு மகன் கூடத் தானே போறாரு அதுக்கு எதுக்கு இந்த வெளம்பரம்

காக்கைச் சித்தர்

"என் மீது காவி சாயம் பூச முடியாது. அமித்ஜி எனக்கு வேற அஜெண்டா குடுத்திருக்காருன்றது இந்த தமிழ்நாட்டு பிஜேபி பயலுகளுக்கு தெரியல"

м υ я υ g α η . м

உண்மையிலே நாம உண்மையா இருக்கோன்றது நம்மள தவிர வேற யாருக்கும் தெரியாது.!

வள்ளுவன்😍ராஸ்கல்

நாம் வன்மம் கொண்டு இலவசமாய் வாரி இரைக்கும் வார்த்தைகள் ஒருநாள் வட்டியும் முதலுமாய் நம்மிடம் வந்து சேரும் காயங்களோடு

கப்பல் வியாபாரி

அந்த நாலு போட்டோல தோழர் பனிமலர் போட்டோ எதுவும் இடம்பெறாதது வருத்தம்ப்பா.. ஓ 2கே கிட்ஸின் சிலுக்கே

வெளிநாட்டுக்காரன் தனிமை

என்னை பற்றியும் என் குணத்தைப்பற்றியும்

நீங்கள் விமர்சிப்பது எளிதான ஒன்றுதான்... !!

நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில்...!!!!

எனக்கொரு டவுட்டு ⁉

சேலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் குஷியில் போட்டி போட்டி பணம் எடுத்துள்ளனர்.

அடேய், பணம் எடுத்தவங்க எல்லாம் திருப்பி கொடுத்திருங்கடா. இல்லன்னா பேங்க்குள்ள போறதுக்கும் சார்ஜ் போடுவானுங்க..!

ரஹீம் கஸ்ஸாலி

புது மழைக்குத்தான் மண் வாசனை வரும். தொடர் மழைக்கு வருவதென்னவோ சாக்கடை வாடைதான்.

myck

சட்டையில் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் போது..

ஆண் பொறுக்கி என்ற பெயரையும்...

பெண் மாடர்ன் கேர்ள் என்ற பெயரையும் பெறுகின்றனர்

-லாக் ஆஃப்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon