மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

தடையை மீறி தாது மணல்: தொழிற்சாலை மீது வழக்கு!

தடையை மீறி தாது மணல்: தொழிற்சாலை மீது வழக்கு!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக தடையை மீறி தாது மணல் பதுக்கி வைத்திருந்தாக தனியார் தொழிற்சாலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தடையை மீறி தாது மணல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராதா, மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, அங்குள்ள குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10,500 மெட்ரிக் டன் இலுமினேட் என்ற கனிம மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனம் மீது 420, 379, 21(1), 21 (4ஏ), 21 (4), MMDR Act ஆகிய பிரிவுகளின் கீழ் சிப்காட் போலீஸ் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த மாதம் 25ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கப்பலில் தாது மணல் கொண்டு வரப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது, என தூத்துக்குடி துறைமுக சபை தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். மேலும், விவி நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து அந்நிறுவனத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தாது மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கிவைக்க மட்டும் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் துறைமுகத்தில் இருந்து தொழிற்சாலைக்கு கனிம மணல் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon