மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

மரப் பயிர் சாகுபடி: விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஈஷா

 மரப் பயிர் சாகுபடி: விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஈஷா

விளம்பரம்

ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாபெரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஸ்ரீவாரி மஹாலில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், விஞ்ஞானிகளும், முன்னோடி விவசாயிகளும் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பெங்களூரூ மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் சுந்தர ராஜ், சந்தன மரம் வளர்ப்பு மற்றும் அதை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்துப் பேசினார். ‘பிரம்மவனம்’ வேளாண் காட்டை உருவாக்கியுள்ள முன்னோடி விவசாயி கணேசன் செம்மர வளர்ப்பு குறித்துப் பேசினார்.

கோபி விவசாயி செந்தில்குமார் மரங்களுக்கு இடையே விவசாயம் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும், புதுக்கோட்டை விவசாயி கருப்பையா வேப்பமரம் வளர்த்து லாபம் ஈட்டுவது குறித்தும் பேசினார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி சதாசிவம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுதவிர, ஈஷா விவசாய இயக்க தன்னார்வலர் முத்துக்குமார் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், ”ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் வேளாண் காடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறோம். மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து மண்ணுக்கேற்ற மரங்களைப் பரிந்துரை செய்கிறோம். ஈஷாவின் முயற்சியால் தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு மாறியுள்ளனர். இதனால், அந்த விவசாயிகளின் பொருளாதாரமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆலோசனை வழங்குவதோடு மட்டுமின்றி வேளாண் காடு வளர்ப்பில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளில் அவ்வப்போது மரப் பயிர் சாகுபடி பயிற்சிகளையும் நடத்தி வருகிறோம். அந்த வகையில், ஊத்தங்கரையில் கணேசன் என்ற ஒரு விவசாயி தண்ணீர் வசதியற்ற 50 ஏக்கர் மானாவாரி நிலத்தில் 15 ஆண்டுகளாக மரம் வளர்த்து வருகிறார். இப்போது அவருடைய பண்ணை ஒரு மதிப்புமிக்க வேளாண் காடாக மாறியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த பயிற்சி கூட்டத்தில் பெண்கள், இளைஞர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விவசாயி கணேசனுக்கு சொந்தமான 50 ஏக்கர் வேளாண் காட்டை விவசாயிகள் அனைவரும் சுற்றிப் பார்த்தனர்.விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

விளம்பர பகுதி

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon