மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

ராதாபுரம் எம்.எல்.ஏ. யார்? அப்பாவு, இன்பதுரை டெல்லியில் முகாம்!

ராதாபுரம் எம்.எல்.ஏ.  யார்?  அப்பாவு, இன்பதுரை டெல்லியில் முகாம்!

இந்திய அரசியல் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது . வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 23) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை இந்தியாவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் சீலிடப்பட்ட கவரில் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்.

உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கத் தடையை நீட்டிக்கும் பட்சத்தில் சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கும்

இன்று பகல் 12.30 மணியளவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அப்பாவுவும், இன்பதுரையும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு- சிரிப்பவர் யார்?

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon