மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

பிச்சை எடுத்த முதியவர்: உதவிய ஆட்சியர்!

பிச்சை எடுத்த முதியவர்: உதவிய ஆட்சியர்!

பிச்சை எடுத்த முதியவருக்கு உதவிய திருவண்ணாமலை ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இன்றைய சூழலில் முதியவர்களை வீட்டை விட்டு அனுப்புவதும், அவர்களைக் கொடுமைப் படுத்துவதும் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற பல வீடியோக்களைப் பார்த்திருப்போம். வயதானவர்களை பாரமாகக் கருதும் அவர்களின் உறவினர்கள் முதியோர்களை அடித்தல், கை கால்களை முறுக்கித் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் தேசிய குற்ற பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தமிழகம்தான் முதியவர்கள் தாக்கப்படுவதில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவருக்குத் திருவண்ணாமலை ஆட்சியர் உதவியுள்ளார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்த ஆட்சியர் கந்தசாமி அவரிடம் சென்று பேசியுள்ளார். முதியவரைப் பார்த்து ‘ஏன் இவ்வாறு பிச்சை எடுக்கிறீர்கள்? உங்களுக்குக் குடும்பம் இல்லையா?’ என்று விசாரித்துள்ளார்.

இதற்கு அந்த முதியவர், தன் பெயர் கோவிந்தசாமி, கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தனக்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ஆட்சியர் அரசு நடத்திவரும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மூன்று வேளை உணவுடன் மாதா மாதம் உதவித் தொகை கொடுப்பதாகவும் ஆறுதல் கூறியுள்ளார்.

ஆட்சியர் கூறியதை ஏற்று முதியோர் இல்லத்துக்குச் செல்ல ஒப்புக்கொண்டார் கோவிந்தசாமி. அதன்படி மலப்பாம்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் அந்த முதியவரைச் சேர்த்த ஆட்சியர் அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

வலியச் சென்று பிச்சை எடுத்த முதியவருக்கு உதவிய ஆட்சியர் கந்தசாமியின் செயலுக்குத் திருவண்ணாமலை மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon