மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

ஐ.டி துறையில் புதிய பணியமர்த்தலின் நிலை!

ஐ.டி துறையில் புதிய பணியமர்த்தலின் நிலை!

ஐ.டி துறையில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்குப் புதிய பணியமர்த்தல் விகிதம் 5 விழுக்காடு புள்ளிகள் குறைவாகவே இருக்குமென்று எக்ஸ்பீரிஸ் எம்பிளாய்மென்ட் அவுட் லுக் சர்வே ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், “நடப்பாண்டின் அக்டோபர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய பணியமர்த்துதல் விகிதம் 47.54 விழுக்காடு புள்ளிகளாக இருக்கும். இது கடந்த ஆறு மாதங்களில் 53.41 விழுக்காடு அடிப்படை புள்ளிகளாக இருந்தது. தொழில்நுட்பம் மேம்பாடுகளால் ஐ.டி துறையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக 2021ஆம் ஆண்டில் ஐ.டி துறையில் திறன் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்றவற்றில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த காலங்களில் ஐ.டி நிறுவனங்கள் புதிதாக வேலை தேடுபவர்களுக்கும், ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணி அனுபவம் உடையவர்களுக்குமே அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளன. நகர வாரியாக ஒப்பிட்டுப் பார்த்தால் சில மெட்ரோ நகரங்கள்தான் ஐ.டி நிறுவனங்களின் மையமாக உள்ளது. அதேநேரத்தில் இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் ஐ.டி துறை வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கோயம்புத்தூர், ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத், நாக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் ஐ.டி துறையில் திறன்மிக்கவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வானது ஐ.டி மற்றும் ஐ.டி சாராத 509 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.டி, சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள் ஆய்வில் பங்கெடுத்துள்ளனர்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon