மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன் :அப்டேட் குமாரு

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன் :அப்டேட் குமாரு

காலைல பஸ்ல வரும் போது ஒருத்தன் சீட் இருந்தும் நின்னுகிட்டே வர்றான். விஷயம் என்னன்னு விசாரிச்சா, தம்பி தளபதி ஃபேனாம்.

நேத்து தான் மண் சோறு சாப்பிட்டு அப்பிடியே கிரேன்ல பறக்கும் காவடி எல்லாம் எடுத்துகிட்டு வந்திருக்காரு. அந்த எஃபெக்ட்ல தான் தம்பியால உக்கார முடியலயாம். அய்யோன்னு பரிதாபப்பட்டு, நான் பாட்டுக்கு அந்த சீட்ல உக்காந்தேன். பாத்தா முன்னாடி சீட்ல ஒரே பஞ்சாயத்து, ‘ரஜினி பிஜேபிக்கு வரணும்னு பொன்னார் சொல்றாரு, எங்கயும் போமாட்டருன்னு கருணாஸ் சொல்றாரு. அவரு எந்த கட்சில சேருவாரு’ன்னு மாத்தி மாத்தி பேசிக்கிறாய்ங்க. நானும் பாட்டு கேக்குறமாதிரி ஹெட்செட்ட காதில மாட்டி வச்சு என்ன பேசுறாய்ங்கன்னு கேட்டிட்டு இருந்தேன். ‘என் மூணாவது படிக்கிற பையனே தலைவருக்கு தான் ஓட்டு போடுவேன்னு இப்போவே சொல்றான்’ன்னு ஒருத்தர் பெருமையா சொல்ல, இன்னொருத்தர் ‘ஆமாடா என் பையன் கூட மூணாவது படிக்கும்போது அப்படித்தான் சொன்னான். இப்போ ரெண்டு எலெக்‌ஷன்ல ஓட்டு போட்டுட்டான்’னு பதில சொல்றாரு. ஐயோ நமக்கு எதுக்கு வம்புன்னு அந்த பாட்ட ஆன் பண்ணி விட்டேன். நீங்க போய் அப்டேட்ட படிங்க.

ஜோக்கர்

எல்லாரும் படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டுட்டு இருக்கிறப்ப,

அதுல ஒருத்தன் மட்டும் தலைவன் "சூட்டிங் போகணும்"னு வேண்டி மண்சோறு சாப்பிட்டுட்டு இருந்தான்.

எமகாதகன்

தமிழக மக்கள் இன்றளவும்

சரியாக கடைபிடிக்கும்

ஒரே ஒரு சட்டம் பேருந்துகளில்

புகை பிடிக்கக் கூடாது

என்பது தான்

ரமேஷ்.ஏ

நைட் வீட்டுக்குள்ள தூங்கிட்டு காலையில முழிச்சி பாக்கும் போது மூஞ்சிக்கு மேல துணி காய்ஞ்சிட்டு இருக்கவும் தூக்கத்துல நடந்து வந்து மொட்ட மாடியில வந்து படுத்துகிட்டோமோனு குழப்பம் ஆயிடுச்சி.

-மழைகால அலப்பரைகள்.

ஜோக்கர்

"தன்னம்பிக்கை" நிறைந்தவனுக்கும், "தற்பெருமை" நிறைந்தவனுக்கும் வித்தியாசம் யாதெனில்,

முன்னவன் பேசுகையில் பத்தில் "ஒன்பது வெற்றியாளர்களை" பற்றியும்,

பின்னவன் பேசுகையில்,

"பத்தில் ஒன்பது, தான் வெற்றிபெற்ற கதையாகவும்" இருக்கும்.

ஜோக்கர்

இன்னைக்கு பட்டாசு வெடிக்காத, மாசுபடும்னு அட்வைஸ் பண்ற பயலுகலாம் யாருன்னு நினைச்சே??!

கார்த்திகை அன்னைக்கு "டயர கொளுத்திட்டு" திரிஞ்சு பயலுகதான்..!!

எமகாதகன்

"நாம் பிறருக்கு உதவி செய்தால்

நமக்கு நல்லது நடக்கும்

என்ற நம்பிக்கை

மூட நம்பிக்கையில் சேராது"

தமிழ்

நமக்கு என்ன தெரியும் என்பதை விட மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்பதை தெரிந்து வைத்திருப்பது புத்திசாலித்தனம்...

ச.ரா

வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு அடியையும் ..

எச்சரிக்கையுடன்

எடுத்து வையுங்கள்..

வாழ்க்கையின் ஆழம் எவ்வளவு

என்று யாரும் கணித்திட இயலாது..

Ethirneechal P Guru

நொருங்குவதற்காகவே

வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன

பலகாரங்கள்..!

பரிதி நிலவன்

சரியோ

தவறோ

அடுத்த அடி

எடுத்த வைக்க

தயங்குவதில்லை..

-தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்..!!

முகமூடி

தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம்,

முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்வில் ஜெயித்து விடலாம்..!!

-லாக் ஆஃப்

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon