மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

பதில் தாக்குதல்: 18 பயங்கரவாதிகள், 16 பாக் வீரர்கள் பலி!

பதில் தாக்குதல்: 18 பயங்கரவாதிகள், 16 பாக் வீரர்கள் பலி!

அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் எல்லைக் கட்டுப்பாடு முழுவதும் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நீலம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மூன்று இடங்களில் இந்திய ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் குறைந்தது 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் பிற ஜிஹாதிகள் அடங்கிய பயங்கரவாத ஏவுதளங்களும் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் அழிக்கப்பட்டனஎன்று அதிகாரிகள் மேலும் கூறினர். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், கண்மூடித்தனமான பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 20ஆம் தேதி, இராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இத்தாக்குதல் குறித்து இரண்டு முறை விளக்கமளித்தார். இந்திய இராணுவம் பாகிஸ்தான் ஏவுதளங்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து, ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்தார் என ராணுவ அதிகாரிகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு தெரிவித்தனர். ராஜ்நாத் சிங், பயங்கரவாத ஏவுதளங்கள் எதையும் விட்டுவைக்கக் கூடாது என்றும், அப்பாவி பொதுமக்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் பிபின் ராவத்திடம் கூறியிருக்கிறார்.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon