மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கைதி கொடுக்கும் தீபாவளிப் பரிசு!

 கைதி கொடுக்கும் தீபாவளிப் பரிசு!

விளம்பரம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கைதி’.

‘ராட்சசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள படமான கைதி தீபாவளியை முன்னிட்டு அதிரடியாக களமிறங்குகிறது. கதாநாயகி, பாடல்கள், பகல் காட்சிகள் இல்லாமல் எந்த வணிக ரீதியான சமரசங்களுக்கும் உட்படாமல் வலிமையான திரைக்கதையின் பயணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து உருவாகியிருக்கிறது ‘கைதி’. சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, ராட்சசி என படத்திற்குப் படம் வித்தியாசமான களங்களுடன் வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இம்முறை கைதியின் இரவுப் பயணத்தைப் பற்றி மக்களிடம் கதைக்க வருகின்றது.

2017ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம், ரசிகர்களை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். இரவில் இயங்கும் மாநகரத்திற்குள் பனி போல உரைந்திருக்கும் அன்பை, திரைக்கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்தி, படத்தின் இறுதியில் பார்வையாளனுக்கும் அதைக் கடத்தியதில் வெற்றி கண்டார் லோகேஷ். ‘மாநகரம்’ - பெருநகரத்தின் மீதான ‘ஸ்டீரியோடைப்’பார்வையை மாற்றி, மனிதம் நிறைந்த மாண்புமிகு நகரத்தை பார்வையாளனுக்கு அளித்தது. இப்படம் சமகால இயக்குநர்களில் நம்பிக்கை அளிப்பவராக லோகேஷ் கனகாராஜை மாற்றியது. அதன் பின்னர், இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே கைதி.

நாயகனுக்கான சினிமாவாக இருந்தாலும் சரி, கதைக்கான சினிமாவாக இருந்தாலும் சரி, தனக்கான சினிமாவை சரியாக தேர்ந்தெடுப்பதில் கார்த்தி எப்போதும் தனித்துவமானவர். படம் முழுவதும் ஒரே உடை, தோற்றம், இரவில் மட்டுமே அமைந்த காட்சிகள், ரிஸ்கான சண்டைக்காட்சிகள் என ஒரு நாயகனுக்கான அனைத்து சவால்களும் நிரம்பியுள்ள கைதியை தேர்ந்தெடுக்கும்போதே கைதியின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. கடைக்குட்டி சிங்கம், தேவ் என வெவ்வேறு பயணங்களில் இருந்த கார்த்தி, ‘கைதி’யின் மூலம் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், சண்டைபயிற்சி: அன்பறிவ், கலை: என்.சதீஷ் குமார், வசனம்: பொன் பார்த்திபன்&லோகேஷ் கனகராஜ்.

‘கைதி’ ரிலீஸ்: இன்னும் 4 நாட்களில்

விளம்பர பகுதி

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon