மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

டெஸ்ட் தொடர்: ‘க்ளீன் ஸ்வீப்’ வெற்றி!

டெஸ்ட் தொடர்: ‘க்ளீன் ஸ்வீப்’ வெற்றி!

ராஞ்சியில் நடைபெறும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் 4அம் நாளான இன்று, தென் ஆப்பிரிக்க அணியை 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியையும் வெற்றி பெறும் முனைப்பை ஆரம்பித்திலிருந்தே வெளிப்படுத்தி வந்தது. மூன்றாவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 51 ரன்களும் விளாசினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல், 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், நதீம், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, ‘பாலோ-ஆன்’ ஆகி, 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க 3 ஆவது நாள் ஆட்டநேர முடிவில், 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இன்று காலை தொடங்கிய 4வது நாள் ஆட்டத்தில், 12 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஷாபாஸ் நதீம்தான் பந்துவீச்சில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, தனது சொந்த மண்னில் 11 தொடர்களில் தொடர்ந்து வென்று சாதனை புரிந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் பெற்று மற்ற அணிகளைக் காட்டிலும் வெகுதொலைவில் முதலிடத்தில் உச்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் 60 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருப்பது இந்திய அணியின் எழுச்சிக்கு ஒரு சான்றாகும்.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரண்டையும் கைப்பற்றினார் ரோகித் சர்மா. இத்தொடரில் முகமது ஷமி அதிகபட்சமாக 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon