மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: பனீர் பிங்கர்ஸ்

கிச்சன் கீர்த்தனா: பனீர் பிங்கர்ஸ்

இன்று வீட்டிலுள்ள அனைவரும் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். பனீர் கொண்டு உணவு தயாரிப்பதில் ஹோட்டல்கள்தாம் சிறந்தவை என்ற காலம் மாறிவிட்டது. சுவையான, சத்தான பனீர் ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்யலாம் என்று இக்காலத்துப் பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று இந்த பனீர் பிங்கர்ஸ்.

என்ன தேவை?

பனீர் - 100 கிராம்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கார்ன்ப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்

பிரெட் க்ரம்ஸ் (பிரெட் துகள்கள்) - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பனீரை சிறிய நீளமான வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிடவும். கார்ன்ப்ளார் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியான மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் ஊறிய பன்னீர் வில்லைகளைத் தோய்த்து, பிரெட் துகள்களில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: ரவா ரொட்டி

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon