மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

இன்ஃபோசிஸ் தலைமைமீது ஊழியர்கள் குற்றச்சாட்டு!

இன்ஃபோசிஸ் தலைமைமீது ஊழியர்கள் குற்றச்சாட்டு!வெற்றிநடை போடும் தமிழகம்

இன்ஃபோசிஸின் அடையாளத்தை வெளிப்படுத்தாத ஊழியர்கள் சிலர், அதன் தலைமை அதிகாரிகளின் நெறிமுறையற்ற நடைமுறைகளைக் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோரின் மீது பெயரை வெளிப்படுத்த விரும்பாத இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

தங்களை ‘நெறிமுறை ஊழியர்கள்’ என அழைத்துக்கொள்ளும் பெயரை வெளியிட விரும்பாத சில இன்ஃபோசிஸ் ஊழியர்கள், “சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் ஆகிய இரு தலைமை அதிகாரிகளும் பல மாதங்களாக நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அவர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் அவர்களின் உரையாடல்களின் குரல் பதிவுகளிலிருந்து இவற்றை ஆதாரமாகக் கூறமுடியும்” என்று செப்டம்பர் 20 அன்று ஒரு புகார் கடிதத்தை ஐடி இயக்குநர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், “2019-20 நிதியாண்டின் மதிப்பாய்வில், எஃப்டிஆர் ஒப்பந்தத்தில் (ஹெல்த்கேர் போன்றவை அடங்கிய) 50 மில்லியன் டாலர் முன்பணக் கட்டணத்தை மாற்றியமைக்க தலைமை அதிகாரிகள் தங்களுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தனர்.

முக்கியமான தகவல்கள் ஆடிட்டர்களிடம் மறைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் வெரிசோன், இன்டெல் மற்றும் ஜேவிக்கள் (கூட்டு முயற்சிகள்), ஏபிஎன் அம்ரோ கையகப்படுத்தல் போன்ற பெரிய ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, இந்தத் தகவலைப் பற்றி ஆடிட்டிர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டது” என அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அலுவலக சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியது, முறைகேடுகளை வெளியே சொல்லாமலிருக்க பணியின்போது கொடுக்கப்பட்ட அழுத்தம் எனத் தலைமை அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை இவர்கள் வைத்துள்ளனர்.

அவர்களது கடிதத்துக்கு இயக்குநர்கள் குழுவிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ‘விசில்ஃப்ளோவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு’ கடிதம் எழுதப்பட்டது. வேண்டுமென்றே தவறான அறிக்கை வெளியிடுவது, கணக்கில் முறைகேடு போன்ற குற்றங்களை இரண்டு காலாண்டுகளாகத் தலைமை அதிகாரிகள் தொடர்ந்து வருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த அமெரிக்காவிலுள்ள நிறுவனம், நேற்று (அக்டோபர் 21)வெளியிட்ட அறிக்கையில், விசில்ஃப்ளோவர் புகார் நிறுவனத்தின் நடைமுறைகளின்படி, தணிக்கைக் குழு முன் 'நெறிமுறை ஊழியர்கள்'கள் அனுப்பிய புகார் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஐடி ஊழியர் ஒருவர், “இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விசில்ஃப்ளோவர் கொள்கையின்படி இந்த புகார் தீர்க்கப்படும்” என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon