மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

‘ஆடை’ ரீமேக்கில் கங்கணா?

‘ஆடை’ ரீமேக்கில் கங்கணா?வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழில் அமலா பால் நடித்த ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க கங்கணா ரணாவத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமலா பால் நடித்த ஆடை, அதன் டிரெய்லர் மற்றும் அமலா பாலின் தைரியமான முயற்சி காரணமாகப் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பியது எனலாம். ஜூலை 19ஆம் தேதி ஆடை வெளியானபோது, படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அமலா பாலின் நடிப்புக்காக ஆடை ஏகமனதாகப் பாராட்டப்பட்டது.

மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் இயக்கிய இரண்டாவது படமான ஆடை படத்தில் விவேக் பிரசன்னா, விஜே ரம்யா, சரித்ரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பின், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் புதிய படத்தில் ரத்னகுமார் திரைக்கதை பணிகளில் பங்காற்ற இருக்கிறார்.

இந்த நிலையில், ஆடை படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கங்கணா துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர். மகேஷ் பட் தயாரித்த வோஹ் லம்ஹே திரைப்படம்தான், கங்கணாவுக்குத் திருப்புமுனையாக அமைந்த படமென்பதால், ஆடை ரீமேக்கில் நிச்சயம் அவர் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது கங்கணா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon