மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

சீனப் பட்டாசுகள் விற்றால் தண்டனை!

சீனப் பட்டாசுகள் விற்றால் தண்டனை!

சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க மொபைல் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது மக்களின் மனம் கவர்ந்தவற்றுள் ஒன்று பட்டாசு. பட்டாசு தயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. பட்டாசு தயாரிக்கப்படும் மருந்தில் கலக்கப்படும் பேரியம் உள்ளிட்ட ரசாயன அளவை குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பசுமை பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தியாவில் ஏற்கனவே சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனப் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், அதிகப்படியான வண்ணங்களுக்கு ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 22) மத்திய சுங்கத் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தடை விதிக்கப்பட்டுள்ள சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து, இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யக் கூடாது. சட்ட விரோதமாகச் சீனப் பட்டாசுகள், வாங்குதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது சுங்கத்துறை சட்டம் 1962ன் கீழ் குற்றமாகும். சீனப் பட்டாசுகள் வாங்குவது உள்நாட்டுப் பட்டாசு தொழில் மற்றும் வணிகத் துறைக்கு எதிராகும். எனவே ஆபத்தை ஏற்படுத்தும் சீனப் பட்டாசுகள் வாங்குவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon