மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

அப்போ தீபாவளி சண்டே இல்லியா: அப்டேட் குமாரு

அப்போ தீபாவளி சண்டே இல்லியா: அப்டேட் குமாரு

‘அமெரிக்காவில ட்ரம்பே தீபாவளி கொண்டாடப் போறாரு. உனக்கு அந்த ஐடியா எதுவும் இல்லியான்னு வூட்ல கேக்குறாங்க. மழை பெய்யுற அழக பாத்தா தீபாவளி கொண்டாட போட்ல தான் வீட்டுக்குப் போணும்னு தோணுது. நீ என்னடா பண்ணப்போற’ன்னு நட்பு ஒருத்தன் கிட்ட கேட்டா, ‘எங்களுக்கு இந்த வாட்டி தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்டா, வெள்ளிக் கிழமையே கொண்டாட்டம் ஆரம்பிக்குதுடா’ங்கிறான். அப்போ தீபாவளி சண்டே இல்லியாடானு ஒரு நிமிஷம் டவுட்டு வந்தாலும், என்ன மச்சான், தல தீபாவளிக்கு தங்கச்சி ஊருக்கு முன்னாடியே கெளம்புறியான்னு கேட்டேன், ‘இல்ல குமாரு இந்த வாட்டி எனக்கு தல தீபாவளி இல்ல, தளபதி தீபாவளி’ன்னு பழைய காமெடிய ஏதோ இவனே கண்டுபுடிச்ச மாதிரி புதுசா சிரிச்சிட்டே சொல்றான். கேட்டிட்டு இருந்த இன்னொருத்தன் ‘ஆமா, நீங்க எல்லாம் டைல்ஸ் தரைல மண் சோறு தின்னு படம் ஹிட்டாகணும்னு பூஜைய போட்டவைங்க தானே’ன்னு கொளுத்த ஆரம்பிச்சான். அவன் அடுத்த சரவெடிக்கு ரெடியானது அவனோட கண்ணிலயே தெரிஞ்சிது. ஐய்யயோ, இவங்க சண்டைக்கு நடுவராகுறதுக்குப் பதிலா மழையிலயே நனையலாம்னு நான் பாட்டுக்கு கெளம்பி வந்திட்டேன். நீங்க போய் அப்டேட்ட படிங்க.

பாலசுப்ரமணி

தோள்கள் நெருக்கமான

நேரத்தில் காட்டும்

அன்பை விட

தோல்கள் சுருக்கமான

நேரத்தில் காட்டும்

அன்பிற்கே ஆயுள் அதிகம்

எனக்கொரு டவுட்டு

பிகில் படம் வேற ரிலீஸ் ஆகுது, இந்த நேரத்துல தமிழிசை அக்கா வேற பேட்டி கொடுக்க முடியாத சூழல், இதனாலே பிகில் வசூலுக்கு ஏதும் பாதிப்பு இல்லையே..!

படிக்காதவன்

தீபாவளியை

எப்படி கொண்டாடுவது

என்று யோசித்தால்

அது பணக்காரன்..

தீபாவளியை

எப்படி சமாளிப்பது

என்று யோசித்தால்

அது ஏழை..

இருவருக்குமே

பண்டிகை ஒன்று தான்

ஆனால்

சந்தோஷம் வேற...

முகேஷ்

என்னய்யா பாவம் பண்ணினாரு தலைவர், ஒரு படத்தை சினிமா தியேட்டர்ல போயி பாத்தது குத்தமாய்யா

இப்ப சொத்து பத்திரத்தை ரோட்டு வரைக்கும் இழுத்துவிட்டுடிங்க

பாட்டி வைத்தியம்

சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும்

SHIVA SWAMY.P

எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று பெரியவர்கள் சொல்வார்கள்,

ஆனால் அந்த நல்லது எப்போ எங்கே நடக்குது என்று மட்டும் வாழ்க்கை காட்டிக்கொடுக்காமல் மறைத்துவிடுகிறது...!!!

கோழியின் கிறுக்கல்!!

என்ன அநியாயமா இருக்கு,

மழை பெய்தா பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் விடுமுறை, வேலைக்கு போறவங்களுக்கு இல்லை!

அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா மழை பெய்யுமா!?

£athaA

அதானே பிள்ளைகளுக்கு லீவு விட்டா தனியா வீட்டில் விட முடியுமா? பெற்றோருக்கும் லீவு விட்டா தானே புள்ளிங்கோவ கவனிக்க முடியும்.

ச ப் பா ணி

அல்லாடுவது

அல் என்றால் இருள்.இருளில் ஒருவர் நடக்க நேர்ந்தால் தடுமாற்றமும்,

பதற்றமும் ஏற்படும். எனவே அல்லாடுபவர்கள் இந்நிலையில் இருப்பவர்கள்

முகமூடி

கடனோடு காலையில்

எழுவதை விட,

பட்டினியோடு இரவில்

படுப்பது மேல்..!!

முகமூடி

மொத்த உலகமும் முடியாது என்று

சொல்லும்போது,

'ஒருவேளை முடியலாம்' என்று மெல்லியதாக உங்களுக்கு

கேட்கும் குரலே..!!

~நம்பிக்கை

ச ப் பா ணி

என்னையும் மதிச்சு

அஞ்சு பத்தெல்லாம் பரிசு கொடுக்காம,அம்பது இலட்சம் பரிசு விழுந்திருக்குனு மெசேஜ் அனுப்புற பாத்தியா..ரெம்ப பெருமையா இருக்குடா

கோழியின் கிறுக்கல்!!

தொடர் மழை இரவுக்கு பின் விழித்தெழ முடியாமல் சூரியனே சோம்பி கிடக்க,

மனிதன் எம்மாத்திரம்!??

-லாக் ஆஃப்

செவ்வாய், 22 அக் 2019