மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

காமராஜர் நகரை கலக்கிய சாய்பாபா டோக்கன்!

காமராஜர் நகரை கலக்கிய சாய்பாபா டோக்கன்!

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் நேற்று  (அக்டோபர் 21) நடந்த இடைத்தேர்தலில்  ஆளுங்கட்சியான காங்கிரஸாரின்  அத்துமீறல்கள்  தொடர்வதாக  அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காமராஜர் நகர்  தொகுதிக்கு உட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டத்தில் வாக்குச் சாவடி அருகே காங்கிரஸ்கார்கள் வாக்களர்களுக்கு ஒரு சாய்பாபா டோக்கனை கொடுத்துக் கொண்டிருந்தனர். அதன் மதிப்பு 5 ஆயிரம் ரூபாய் என்றும், தீபாவளிக்கு தேவையான பொருட்களை அதன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லி விநியோகித்தனர்.

இதைப் பார்த்த அதிமுகவினர், டோக்கன் விநியோகத்தை நிறுத்துமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. ஆனபோதும் போலீசார் சாலை மறியலை கைவிடுவதற்காக பதினைந்து டோக்கன்களை மட்டும் பறிமுதல் செய்வது போல நடவடிக்கை எடுத்து முடித்தனர்.

ஆனால் அதிமுகவினரோ, ‘பல டோக்கன்கள் விநியோகிக்காமல் இருக்கின்றன. அவற்றை பறிமுதல் பண்ண போலீஸார் மறுத்துவிடனர்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

செவ்வாய், 22 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon