மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

விக்கிரவாண்டி: மேலிடத்துக்கு அனுப்பிய முக்கியத் தகவல்

விக்கிரவாண்டி:  மேலிடத்துக்கு அனுப்பிய முக்கியத் தகவல்வெற்றிநடை போடும் தமிழகம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

விக்கிரவாண்டியில் கிராமப் பகுதி, நகரப் பகுதி என எல்லா பகுதிகளிலும் வாக்குப் பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி முதலே 12.84% வாக்கு சதவிகிதம் பதிவானது. அடுத்து காலை 11 மணியளவில் 32.84 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

திமுக, அதிமுக என இரு தரப்பினரும் கண்களில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா வைப்பதாக அறிவித்திருந்தாலும், சில வாக்குச் சாவடிகளில் மழை காரணமாக வெப் கேமராவுக்கு இணைய இணைப்பு கிடைக்கவில்லை. எனவே எல்லா வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா என்ற நிலை இல்லை.

மேலும் உளவுத்துறையினர் கைலியைக் கட்டிக்கொண்டு வாக்குப் பதிவுக்கு வரும் நபர்களிடம் பேச்சுக்கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மணிக்கும் அவர்கள் மேலிடத்துக்கு தகவல் அனுப்பி வருகின்றன.

12 மணியளவில் விக்கிரவாண்டியில் இருந்து அவர்கள் மேலிடத்துக்கு அனுப்பிய முதல் கட்டத் தகவலில், ‘வன்னியர் சமுதாய வாக்குகள் திமுக, அதிமுக என இரு தரப்புக்கும் பிரிவதாகவும், தலித் சமுதாய வாக்குகள் அதிமுக பக்கம் அதிகமாக விழுவது போன்று தெரிவதாகவும்’ குறிப்பிட்டுள்ளனர்.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon