மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: ரவா ரொட்டி

கிச்சன் கீர்த்தனா: ரவா ரொட்டி

ஞாயிறு கொண்டாட்டங்கள் முடிந்து, திங்கட்கிழமை காலை என்ன செய்யலாம் என்பது இல்லத்தரசிகள் பலருக்கும் எழும் கேள்வி. அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து இந்த ரவா ரொட்டியைச் செய்து அசத்தலாம். வீட்டிலுள்ளவர்களின் பாராட்டைப் பெறலாம்.

என்ன தேவை?

ரவை - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

துருவிய தேங்காய் - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ரவையைத் தயிரில் கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் இதில் உப்பு, தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து, சற்று கெட்டியான தோசை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும் (தயிர் இல்லையென்றால் தண்ணீர்கூடச் சேர்க்கலாம்). இந்த மாவைச் சிறிய ரொட்டிகளாக, கையால் தட்டவும். தோசைக்கல்லில் போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு, இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான ரவா ரொட்டி தயார். இதைச் சூடாகப் பரிமாறுவதே சிறப்பு.

நேற்றைய ஸ்பெஷல் - நிறமும் தரமும்

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon