மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

கஜா பாதிப்பு : வீடு வழங்கிய ரஜினி

கஜா பாதிப்பு : வீடு வழங்கிய ரஜினிவெற்றிநடை போடும் தமிழகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேரின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 21) புதிய வீடுகளை வழங்கினார்.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போது நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்தன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்தன. இதனால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.

நாகை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் செய்யப்பட்டு வந்தன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினியும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இதர ஊர்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்கள் ரஜினி மக்கள் மன்றத்துக்கு வந்தன இதனை வைத்து மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

இதுவொருபுறமிருக்க ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு கட்டும் பணியும் நடைபெற்று வந்தது. ஏழ்மையான 10 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

நாகப்பட்டினம் ரஜினி மக்கள் மன்றச் செயலாளரான டி.எல்.ராஜேஷ்வரன் தலைமையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீட்டுச் சாவிகளை 10 குடும்பத்தினருக்கும் தனது இல்லத்தில் வைத்து ரஜினி வழங்கினார்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 10 குடும்பத்தினரும் ரஜினி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர், அவர்களிடம் கஜா பாதிப்பு மற்றும் அதில் இருந்து மீண்டு வந்ததை கேட்டறிந்த ரஜினி அவர்களிடம் வீட்டு சாவிகளைக் கொடுத்தார். கோடியக்கரையில் 4 வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், என தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 18.5 லட்ச ரூபாய் செலவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

திங்கள், 21 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon