gஇன்னும் திண்ணைப் பிரச்சாரம் ஓயவில்லை!

public

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. அரசியல் கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் இரு தொகுதிகளிலும் மையமிட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வாக்கு சேகரித்து வந்ததால் இரு தொகுதிகளும் திருவிழா கோலம் பூண்டதுபோல காட்சியளித்தது. தற்போது, பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி எப்படி இருக்கிறது என அறிய தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு விசிட் அடித்தோம்.

பிரச்சாரம் முடிந்த பின்னரும், கிராமங்களில் திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், உள்ளூர் கட்சியினர் வீடுகளில் தங்கிக்கொண்டு வீடு வீடாகச் சென்று அமர்ந்து வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு காலை உணவு பார்சல் மூட்டை மூட்டையாக இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் சாவி சின்னத்தில் போட்டியிடும் திரைப்பட இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான கவுதமன் நம்மிடம் பேசும்போது, “தொகுதிக்குள் தற்போது வரையில் அதிமுக, திமுகவினர் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயக ரீதியிலான தேர்தல் அல்ல, பணநாயகத் தேர்தல் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செயலிழந்துவிட்டதா அல்லது ஆளும் அரசியல்வாதிகள் செயலிழக்க வைத்துவிட்டனரா என்பது தெரியவில்லை. ஆனால் 100% சதவிகிதம் செயலிழந்துவிட்டது” என்று பொங்கியவர்,

“மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களான தேர்தல் அதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு உடந்தையாய் இருப்பதைத் தாண்டி, மக்களாட்சி தத்துவத்திற்குத் துரோகம் செய்வதற்கு ஏதும் இல்லை. இதே போக்கு நீடித்தால், எதிர்காலத்தில் பணக்கார வேட்பாளர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ஏலம் விடும் நிலைதான் ஏற்படும்” என்று காட்டமாக விமர்சித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *