மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

அமைச்சர் விளக்கமும் சில சந்தேகங்களும்!

அமைச்சர் விளக்கமும் சில சந்தேகங்களும்!

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கேசவனேரி பகுதியில் இருந்து தன்னை வந்து சந்தித்த இஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுபற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்ட செய்தி பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேசவனேரி ஜமாத் தலைவர் ஃபைசல் நம்மிடம் சொன்ன தகவல் செய்தியாக வெளியானதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 18-ம் தேதி )தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். தன்னை 16ஆம் தேதி இரவு சிலர் சந்தித்ததாகவும் ரேஷன் கடை தொடர்பாக பேச வேண்டும் என்று கேட்டதாகவும் அவர்கள் பேச்சு சரியில்லை என்பதால் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் விளக்கம் பற்றி நாம் கேசவனேரி ஜமாத் தலைவர் ஃபைசலிடம் மீண்டும் பேசினோம். “நாங்கள் முதன் முதலாக 16 ஆம் தேதி காலையில் தான் அமைச்சரை சந்தித்தோம். கோரிக்கை வைத்தோம். அப்போது அங்கு நடந்தது என்ன என்பது பற்றிய முழு விவரங்களையும் நான் மின்னம்பலத்திடம் தெரியப் படுத்தி விட்டேன்.

பொதுவாகவே எங்கள் ஊரில் பொது விஷயமாக இருந்தால் அனைவரையும் கலந்து பேசி எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுப்போம். அதன்படியே ஜமாத்தில் ஆலோசித்து ஜமாத் நிர்வாகிகளுடன் தான் அமைச்சரை சந்திக்க சென்றோம். அப்போது எங்களை அமைச்சரை சந்திக்க வரச்சொன்ன நிருபரும் அங்கே இருந்தார்

நாங்கள் கொண்டு சென்ற மனுவை அமைச்சர் வாங்கியே பார்க்கவில்லையே? நாங்கள் அதிமுகவும் கிடையாது திமுகவும் கிடையாது. எங்களுக்கு எந்த கட்சியும் கிடையாது. அமைச்சரை முன்ன பின்ன நாங்கள் பார்த்தது கூட கிடையாது. அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறோம்” என்றார் ஜமாத் தலைவர்.

சனி, 19 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon