மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

சில்லறை விற்பனை கடும் வீழ்ச்சி: ஆய்வு ரிப்போர்ட்!

சில்லறை விற்பனை கடும் வீழ்ச்சி: ஆய்வு ரிப்போர்ட்!

கிராமப்புற எஃப்.எம்.சி.ஜி வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், நகரங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு விற்பனை வீழ்ச்சியடைந்ததெனவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எஃப்எம்சிஜி சந்தை ஆராய்ச்சியாளர் நீல்சன் நேற்று(அக்டோபர் 17) டெல்லியில் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், “செப்டம்பர் காலாண்டில் , கிராமப்புற இந்தியாவில் நுகர்வுப் பொருட்களின் விற்பனை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. நகர்ப்புறங்களில் கண்டதை விட இந்த வீழ்ச்சி கிராமப்புறங்களில் அதிகம். நீண்டகாலமாக நீடித்து வரும் விவசாயிகளின் துயரங்கள், சீரற்ற மழைப்பொழிவு மற்றும் தேக்கமடைந்த கிராமப்புற வருமானங்கள் ஆகியவை பிராண்டட் பேக்கேஜ் செய்யப்பட்ட விற்பனையை தாக்கியுள்ளன” எனத் தெரிவித்தார்.

மெதுவான வேகத்தில் நகரும் நுகர்வோர் பொருட்கள் சந்தை செப்டம்பர் காலாண்டில் மோசமடைந்தது. கிராமப்புற இந்தியாவில் வளர்ச்சி ஒரு வருடத்திற்கு முன்பு 16 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்தது. எஃப்.எம்.சி.ஜியின் மிகப்பெரிய சந்தையான வட இந்தியாவில், பொருளாதார மந்தநிலையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது என நீல்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும், தென்னிந்தியாவில் மந்தநிலை, கடந்த ஆண்டை விட வளர்ச்சி விகிதத்துடன் பொருந்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய காலகட்டங்களில், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புற வளர்ச்சி மிக வேகமாக குறைந்துள்ளது. கிராமப்புற எஃப்.எம்.சி.ஜி வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும் போது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விற்பனை சரிந்துள்ளதாகவும் நீல்சன் குறிப்பிட்டுள்ளார்.

எஃப்எம்ஜிசி என்றால் என்ன?

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் எஃப்எம்ஜிசி எனப்படும். விலை மலிவானதும், விரைவில் விற்றுத்தீரக்கூடியதும், காலாவதியாகக்கூடியதுமான பொருட்களை இது குறிக்கிறது. உதாரணமாக விரைவில் காலாவதியாகக் கூடிய பொருட்களான குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் விரும்பும் விலை மலிவான மிட்டாய்கள் மற்றும் சாக்லெட் போன்ற நுகர்பொருட்களையும் குறிப்பிடலாம்.

வெள்ளி, 18 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon