மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

விக்கிரவாண்டி: அதிமுக இரண்டாயிரம் விநியோகம்!

விக்கிரவாண்டி: அதிமுக  இரண்டாயிரம் விநியோகம்!

இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் விக்கிரவாண்டியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுவதால் நாங்குநேரியை விட இங்கே இரு கழகத்தினரிடமும் கூடுதல் முனைப்பு தெரிகிறது.

பிரச்சாரத்தில் மட்டுமல்ல, பணப்பட்டுவாடாவிலும் அதிமுகவை முந்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக 14 ஆம் தேதியே அதிகாலை தொடங்கி தொகுதி முழுக்க ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பணப்பட்டுவாடாவை நடத்தி முடித்துவிட்டது. இது தொடர்பாக திமுக; அதிகாலை பட்டுவாடா ஆயிரம் ரூபாய் என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில் பொறுமையாகக் கொடுத்தாலும் திமுகவை விட இரண்டு மடங்கு பொருண்மையோடு இன்று (அக்டோபர் 16) பண விநியோகத்தைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. இன்று காலை முதல் விக்கிரவாண்டி அதிமுகவினர் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணத்தை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

திமுகவைப் போலவே குழு அமைத்து நேற்று இரவே வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்த்து தயாரான அதிமுக குழுவினர் இன்று பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டனர்.

அதிமுகவினர் பணம் கொடுப்பது திமுகவினருக்கு தெரியும், திமுகவினர் பணம் கொடுத்தது அதிமுகவினருக்கும் தெரியும். ஆனாலும் இரு கழகத்தினருக்கும் இடையேயான ஜென்டில்மேன் அக்ரிமென்ட் படி இரு கழகங்களின் பணப்படுவாடாவும் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது.

”திமுக நேற்று முன் தினம் பண விநியோகம் செய்தபோது மதியத்துக்கு மேல் போலீஸார் ஒவ்வொரு கிராமத்திலும் இறக்கப்பட்டனர். இதனால் திமுகவினர் பதற்றம் அடைந்தபோது, ஒண்ணும் பதற்றப்படாதீங்க. எவ்வளவு கொடுக்குறீங்கனு தெரிஞ்சுக்கதான் வந்தோம் என்று போலீஸாரே கூறினர். ஆனால் இன்று அதிமுகவினர் பண விநியோகத்தின் போது போலீஸார் தலை அவ்வளவாக தென்படவில்லை.

புதன், 16 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon