மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

கண்ட்ரோலர் சப்போர்டுடன் களமிறங்கும் கால் ஆஃப் டூட்டி!

கண்ட்ரோலர் சப்போர்டுடன் களமிறங்கும் கால் ஆஃப் டூட்டி!

கால் பண்றதுக்காக மட்டும் மொபைல் ஃபோன் பயன்படுத்துறவங்களோட எண்ணிக்கை இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்து போச்சு.

நாளுக்கு நாள் அதிரடி அப்டேட்களோட வெளியாகி வருகிற மொபைல் அப்ளிகேஷன்கள் பயன்பாட்டாளர்களோட எல்லா வேலையையும் ரொம்பவே ஈசி ஆக்கிருச்சு. அதிலயும் மொபைல் கேம்களோட வளர்ச்சி ஒரு டெக்னாலஜி புரட்சியையே ஏற்படுத்தி இருக்குன்னு சொல்லலாம். அடிதடி, துப்பாக்கி, ஆக்‌ஷன், ஷூட்டிங்ன்னு விதவிதமா பல மொபைல் கேம்கள் வெளியாகி வருது.

சாதாரணமா கம்பியூட்டர், லாப்டாப்ல எல்லாம் விளையாடப்பட்டு வந்த பல கேம்கள் ஸ்மார்ட்ஃபோன்களிலயே விளையாடக் கிடைக்கிற மாதிரி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கு. அதன் காரணமா அந்த கேம்களை விளையாடுறவங்களோட எண்ணிக்கையும் இப்போ ரொம்பவே அதிகமாகியிருக்கு. அந்த வகையில வெளிவந்திருக்க பப்ஜி விளையாட்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியது. இந்த சூழல்ல வீடியோகேமில் மாபெரும் வெற்றி பெற்ற கால் ஆஃப் ட்யூட்டி கேமும் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஸ்மார்ட் ஃபோனுக்கு களம் இறங்கி அதிரடியா வளர்ந்திட்டு வருது.

பப்ஜி மாதிரியான கேம்களில நீங்க எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும்னா, கால் ஆஃப் டூட்டில ஒரு நாடை உருவாக்கி அது பாதுகாக்கவும், எதிரி நாட்டை அழிக்கவும் முடியும். அது புதுவிதமான அனுபவங்களை அந்த கேம்களை விளையாடுறவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போ கூடுதல் அப்டேட்டா கண்ட்ரோலர் சப்போர்ட்டோட கால் ஆஃப் டூட்டி கேம் களமிறங்கத் தயாராகியிருக்கு. இந்தத் தகவலை பிரபல மொபைல் வெளியீட்டாளரான ஆக்டிவிஷன் உறுதிப்படுத்தியிருக்கு.

இது மட்டுமில்லாம அதிகப்படியான லாக்-இன் ஆப்ஷன்கள், பெர்பார்மென்ஸ் அப்கிரேடுகள் ஏமாற்றுக்காரர்களைக் கண்டுபிடித்து புகார் அளிக்கிற திறன்னு கூடுதல் அம்சங்களும் இணைக்கப்பட உள்ளது.

செவ்வாய், 15 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon