மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

ஜான் டியர்: பாதுகாப்பின் உச்சம்!

 ஜான் டியர்:  பாதுகாப்பின் உச்சம்!

விளம்பரம்

விவசாய கருவிகளின் உள்ளீடானது பசுமை புரட்சியின் மூலமாக பன்மடங்கானது. விவசாயத் தொழிலாளர்கள் நகரமயமாக்கலால் நகரங்களுக்கு நகரத்தொடங்கிய காலத்தில், விவசாய வேலைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் செய்துமுடிக்க கருவிகள் கைகொடுத்தன. விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்ப இயந்திரங்களின் பங்கு உணவு உற்பத்தியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால், கருவிகளின் பயன்பாட்டில் ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. தொழிற்புரட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை கருவிகளை இயக்குபவர்களின் பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதாக அக்கறைப்படுவதாக தெரியவில்லை.

ஆனால் ஜான் டியர் ஜாம்பவான்கள் வாகன இயக்குநர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குகின்றனர். இயந்திர பயன்பாட்டில் இன்ன பிற தொழில்களுக்கும் விவசாயத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற தொழில்களில் இயந்திரங்கள் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்படும். அவை நிலைத்திருப்பதற்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது ஒரு இயந்திரம் என்றளவில் மட்டும் பார்க்கப்படும் ஆனால், விவசாயிகள் ட்ராக்டரை வெறும் இயந்திரமாக மட்டும் பார்ப்பதில்லை. இந்த இயந்திரங்களும் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றன. குழந்தைகள் அவற்றில் ஏறி விளையாடுவார்கள். விடலைகள் விளையாட்டாக ஓட்ட முற்படுவார்கள். இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை ஜான் டியர் நிறுவனம் நன்கு உணர்ந்திருந்தது. அதனால் ஜான் டியர் ட்ராக்டர்களில் மட்டும் பிரத்யேக வசதி பொருத்தப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், சாவி இருந்தாலும் தவறுதலாக உங்களால் அதை ஆன் செய்ய முடியாது. அதாவது, குழந்தைகள் கையில் சாவி கிடைத்தாலும் அவர்கள் அதை வைத்து ட்ராக்டரை ஆன் செய்ய இயலாது. கியரை நியூட்ரல் செய்தால் மட்டுமே ட்ராக்டரை ஆன்செய்ய இயலும். இது சாதாரண விஷயம்தான் என்றாலும், அதை முதலில் அறிமுகப்படுத்தியது ஜான் டியர்தான். மேலும் இன்னொரு மிகமுக்கிய பாதுகாப்பு அம்சம் -’ROPS' என்று அறியப்படும் வசதி. ட்ராக்டரில் ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்து ஓட்டும்போது, வண்டி எந்தவகையில் கவிழ்ந்தாலும் அது சமமாக நிற்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் லாவகமாக வெளியே வந்துவிடலாம். இதை பல சோதனைகள் செய்து நிரூபித்துள்ளனர் ஜான் டியர் ஜாம்பவான்கள். இன்னும் வியப்பு என்னவென்றால், எவ்வளவு செங்குத்தான மலைகளில் ஏறினாலும் கவிழ்ந்துவிழாத அளவிற்கு இதன் எஞ்சின் ’back up torque’ திறன் கொண்டது. இந்த சிறப்பான எஞ்சின் செட்-அப் வேறெந்த ட்ராக்டர்களிலும் இல்லை. இதனால் விவசாயிகள் அதிகமான சரக்குடன் மேல்முகடுகளில் கூட சுலபமாக ஏறிவிடுவார்கள்.

இவ்வாறு பாதுகாப்பிற்கும் திறன் மேம்பாட்டிற்கும் அதீத கவனம் கொடுத்து தயாரிக்கப்படும் ஜான் டியர் ட்ராக்டர்கள், விவசாயிகளின் பணத்திற்கு நியாயம் சேர்க்கின்றன.

தைரியமாக வாங்குங்கள். தாராளமாக வாழுங்கள்!

தொடர்பிற்கு :

Toll Free Number : 18002095310

விளம்பர பகுதி

திங்கள், 14 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon