மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

மரத்தில் மோதிய கார் :தேசிய ஹாக்கி வீரர்கள் பரிதாப மரணம்!

மரத்தில் மோதிய கார் :தேசிய ஹாக்கி வீரர்கள் பரிதாப மரணம்!

தயான்சந்த் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த விளையாட்டு வீரர்களின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

எம்.பி அகாடமியைச் சேர்ந்த தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்கள் தயான்சந்த் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் அருகே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. நிலைதடுமாறிய கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த நான்கு ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற மூன்று வீரர்களுக்கும் பலத்தகாயங்கள் ஏற்பட்டது. பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 14 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon